பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

33


சமுத்திரம் மேல்
ஒரு
உதய சூரியன்

வருவார் கலைஞர் என்றும், வாரார் கலைஞர் என்றும் நிரடலோடு ராமநாதபுரத்திற்கு மத்திய அரசின் களவிளம்பரத் துறையின் மாநில தலைமை அதிகாரி என்ற முறையில் டூர் போனேன். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விருந்தினர் மாளிகையில் தடபுடலாகத் தங்கியிருந்தேன்.

ஒருநாள் காலையில் எனது அலுவலக வாட்ச்மேன் எனப்படும் இரவுநேரக் காவலாளி என் அறைக்கு வந்தார். நல்ல இளைஞர். ஆனால் காது மந்தம். நான் பலதடவை ‘கேட்கும் கருவியை’ காதுகளில் பொருத்திக் கொள்ளும்படி கேட்டாலும் அது அவருக்கும் கேட்டாலும், கேளாதது போலவே பாவித்துக் கொண்டவர். உறுப்பு பலவீனம் பெரிதல்ல என்று நான் பலதடவை சொன்னாலும், ஒருதடவை கூட அதை ஏற்றுக் கொள்ளாதவர். காது நன்றாகக் கேட்பது போலவே நடிப்பார். அப்படிப்பட்டவர் என் அறைக்கு வந்து யாரோ நாதன்னு ஒருத்தர் இரவில் அலுவலகத்தில் டெலிபோன் செய்ததாக தெரிவித்தார். என்றாலும் எந்த பெயருக்குரிய நாதன் என்பதை அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. வெறும் நாதன் இல்லை இன்னொரு பெயரையும் முன்னால் கொண்ட ஏதோ ஒரு நாதன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குப் பயம் பிடித்து விட்டது. ஒருவேளை சண்முகநாதன் எனது அலுவலக டெலிபோன் எண்களை வாங்கி ‘இப்படி எழுதினா எப்படிங்க கலைஞர் வருவார்’ என்று சொல்லி விட்டு நிகழ்ச்சியை ரத்து செய்த விவகாரத்தை சொல்ல வந்திருப்பாரோ என்று துடித்துப் போனேன். உடனே தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியான என் இனிய நண்பர்

- 3