பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

35


ஒரு உதறல். அப்படியானால் இந்நேரம் சொல்லி அனுப்பி இருப்பார் என்கிற ஆறுதல்.

பொதுவாக முதல்வரை வைத்து இந்த மாதிரியான விழாக்கள் நடத்துகிறவர்கள் அதிலேயே பணம் கரந்து விடுவார்கள். பிரபல தொழிலதிபர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து அவர்கள் முதல்வரிடமிருந்து படிகள் பெறுவது போல் தொலைக்காட்சி சாட்சியாக காட்டி ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுக்கும்படி செய்து விடுவார்கள். முதல்வர் என்றால் கேட்க வேண்டாம். அத்தனை தொழிலதிபர்களும் கூடி விடுவார்கள். ஆனால், இது ஒரு கேவலமான அணுகுமுறை இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டும் அல்ல. இப்படி விழாவை வியாபார மேடையாக்கும் பேர்வழிகளை நான் வெறுத்து ஒதுக்குகிறவன். அதே சமயத்தில் விழாவிற்கான மின்கட்டணம் இரவு நேரமாகியதால் லேசான மின் தோரணம். பொன்னாடைகள் மாலை மரியாதைகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் என்று முப்பதாயிரம் ரூபாயாவது செலவாகும். மின்கட்டணம் மேடை அலங்காரம் என்று வேறு...

என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே எனது நண்பர் அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நெல்லை நெடுமாறனை தொடர்பு கொண்டு தினத்தந்தி சார்பில் சுவரொட்டிகள் அடிக்கச் செய்தார். நெல்லை நெடுமாறன் திராவிட முன்னேற்ற கழகத்தில் பொறுப்பான பணியில் இருந்தவர். மிகச் சிறந்த ஆய்வாளர், இலக்கியப் பேச்சாளர்.... ஆனாலும், நான் அவரை பேச வரும்படி அழைக்கவில்லை. அது எங்கள் இருவரையுமே கொச்சை படுத்துவதாக இருக்கும் என்று கருதினேன். ஆரம்ப காலத்தில் எனது நூல்களை வெளியிட்டு ஊக்குவித்த மணிவாசகர் நூலகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்கள் அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுத்தார்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநரும் சிறந்த எழுத்தாளருமான ஏ. நடராசன் அவர்களிடம் ‘பொன்னாடை வாங்கிக் கொடுங்கள்’ என்று உரிமையோடு கேட்டேன். ஐந்து வாங்கிக் கொடுங்கள் நான் கலைஞருக்கு போட்டது தவிர எஞ்சிய நான்கு சால்வைகளையும் மற்ற பேச்சாளர்களுக்கு மாற்றி மாற்றி போட்டு சமாளித்து விடுகிறேன்’ என்றேன். உடனே அவர், ‘செய்வதைத் திருந்த செய்யணும்