பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

என் பார்வையில் கலைஞர்


பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் தொழிலமைச்சராக இருந்த வெங்கல்ராவ் தலைமையேற்க, முதல்வர் கலைஞர் அந்தப் பிரிவைத் துவக்கி வைத்தார். நான் வாழ்க்கை வெறுத்துப் போய் கூட்டத்தின் பின்பக்கம் ஒதுங்கி உட்கார்ந்திருந்தேன். சென்னை தொலைக் காட்சியினருக்கு ராஜமரியாதை. வானொலிக்காரனான என்னை சீண்டுவார் யாரும் இல்லை. இவ்வளவுக்கும் அதிகார ஏணியில் நான் இருக்கும் படிகளுக்கு கீழே நிற்கும் தோழர்கள்தான் தொலைக்காட்சி சார்பாக வந்திருந்தார்கள். அமைச்சர்களுக்கான அடுத்தபடியான வரவேற்பு அவர்களுக்குத்தான்.

நான் நொந்து போனாலும், காரியத்தில் கண்ணாய் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பத்து நிமிடங்களுக்குள் புதுடில்லியில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியில் இந்த நிகழ்ச்சியை தலைப்புச் செய்தியாக ஒலிப்பரப்பும்படி செய்து விட்டேன். வானொலி செய்தியை கேளுங்கள் கேளுங்கள் என்று காலைப் பிடிக்காத குறையாக அந்த நிறுவன அதிகாரிகளை கெஞ்சிக் கூத்தாடி கேட்கச் செய்தேன். அவர்கள், முதல்வரையும், மத்திய அமைச்சரையும் கேட்கச் செய்தார்கள். அப்படியும் செய்தி போட்டவர் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

இதை தெரிந்து வைத்தது போல், வெளியே புறப்பட்ட கலைஞர், என்னிடம் நேரிடையாக வந்தார். ‘சமுத்திரம் உங்கள் நான் அப்பவே பார்த்துட்டேன்’ என்று கூறிவிட்டு குசலம் விசாரித்து விட்டு சென்று விட்டார். அத்தனை பேரும் என்னை மொய்த்து விட்டார்கள். நான் அவர்களுக்கு திடீர் வி.வி.ஐ.பியாக மாறிவிட்டேன். இந்த நிறுவனத்தின் இயக்குநர், என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்று, அந்த நிறுவனத்தை எப்படி மேன்படுத்த வேண்டும் என்று எனக்கு விளக்கினார். அவரது நோக்கம், நான் கலைஞருக்கு சொல்லி, கலைஞர் மூலம் மத்திய தொழிலமைச்சருக்கு செய்தி போகவேண்டும் என்பதுதான். என்னை அடிக்கடி மேன்மைபடுத்துகிறவர் கலைஞர். இப்படி பல நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி நட்பாக போய்க் கொண்டிருந்த வானொலிச் செய்திகள் கலைஞரை காயப்படுத்தியதும் உண்டு. செல்வி ஜெயலலிதாவின் அப்போதைய மனச்சாட்சிக் காவலரான நடராஜன் வீட்டில், காவல்துறை ரெய்டு செய்து, அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா பேரவைத் தலைவருக்கு