பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI


பெறவேண்டிய உதவிகளைப் பெற ஆலோசனை நடத்திவிட்டு நேராக இங்கே வருகிறேன்.

எழுத்தாளன் சொல்...

சமுத்திரம் இங்கே குறிப்பிட்டதைப் போல எனக்கும் அவருக்கும் நீண்ட காலமாக ஒரு நெருக்கம் உண்டு. பராசக்தி படம் பார்த்ததிலிருந்தே கலைஞரின் தாக்கம் எனக்கு உண்டு என்று சொன்னார். கலைஞரின் தாக்கமும் உண்டு. கலைஞரை சில நேரங்களிலே தாக்குவதும் உண்டு. (பலத்த கைதட்டல்) அந்த தாக்கம் எனக்கு ஊக்கத்தை அளித்தது. தாக்குவது என்னை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. தாக்குவது என்னை சிந்திக்கச் செய்தது. ஏன் தாக்குகிறார். ஏதோ குறை நம்மில் இருக்கிறது என எண்ணிப் பார்க்கச் செய்தது. எழுத்தாளன் சொல்வது என்றைக்காது ஒருநாள் பலிக்கும்.

நல்லா கேட்ட ஒரு கேள்வி...

நண்பர் சமுத்திரம் அவர்கள் ‘எனது கதைகளின் கதைகள்’ என்ற நூலில் நான் பல நிகழ்வுகளைப் பார்த்தேன். எப்போதும், எந்த ஒரு எழுத்தாளரின் நூலாக இருந்தாலும் அதை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் நிகழ்ச்சிக்கு நான் வருவது, வெளியிடுவது, அந்த நூலைப் பற்றிப் பேசுவது, என்பது நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவர் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்ற தலைப்பில் இந்தக் கதைக்கான கரு உருவான செய்தியை சொல்லியிருக்கிறார். அதில் சில பகுதிகளை நான் படித்துக் காட்டுகிறேன்.

60-ம் ஆண்டு முற்பகுதியில் சென்னையில் கல்லூரியில் படித்து வந்தேன். நான் இருந்த வீடு சேரிப் பகுதி: காம்பவுண்டு வீடு. சுமார் அய்ம்பது பேரைக் கொண்ட மனித சமூகம் என்னைப் பெரிதும் வசீகரித்தது. ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள், அப்பளம் சுடும் பெண்கள், வடை சுடும் ஆயா ஆகியோரின் மாசுமருவற்ற அன்பு என் மனக் கஷ்டத்தை மறக்கச் செய்தது. அய்ம்பது பேருக்கு ஓரே ஒரு கழிவறை. அதுவும் கதவு இல்லாதது. ‘யார் உள்ளே என்று கேட்டுக் கொண்டே மற்றவர் செல்ல வேண்டும். குளிப்பதோ குழாயடிப் பக்கம்: நான் குழாயில் இறங்கி தவலையில் தண்ணீர் பிடித்து டிரம்மை நிரப்பி குளிக்கவேண்டும். சட்டியோடோ, துண்டோடோ அத்தனை பேருக்கும் முன்னிலையில் ஐந்தரையடி உடம்பை முக்கால் நிர்வாணத்தோடு காட்டிக் கொண்டிருக்க