பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

என் பார்வையில் கலைஞர்


சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், நான் ஆறு மாதங்களே குப்பை கொட்டினேன். குப்பை கொட்டினேன் என்பதை விட, அவற்றை அப்புறப் படுத்தினேன். கலைஞர், மூப்பனார், ஜெயலலிதா போன்றவர்களைத் தவிர, வேறு எந்தத் தலைவரின் செய்திகளையும் போடுவது இல்லை. இப்போது நன்றாக நினைவிருக்கிறது. உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். ஒரு உதிரிக் கட்சித் தலைவர், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து தாம் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார். உடனே நான், ‘முதலில் அந்தக் கிராமத்தில் போய் உண்ணாவிரதம் இருங்கள், இல்லையென்றால், மறியல் செய்யுங்கள். நான் தொலைக்காட்சி கேமராவோடு வருகிறேன், நீங்க எந்தச் செயலும் செய்யாமல், என்னால் செய்தி போட முடியாது’ என்று மறுத்து விட்டேன். இப்படி மறுக்கப்பட்டவர்களுக்கு, எனது மாற்றம் ஒரு வரப் பிரசாதமானது.

எனக்குக் கலைஞர் மீது கட்டற்ற கோபம். அவரை உண்டு, இல்லை என்று பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.