பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

93



சென்ற என்னுடன், கடுமையாக வாதிட்ட காவற்துறை உயர் அதிகாரியான அதே பாலச்சந்திரன் என்னை ஆச்சரியாகப் பார்த்தார். இரண்டு மூன்று மாத இடைவெளிக்குள் நான் ஏன் அப்படி மாறினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், உடனடியாக அவர் இயல்பான நிலைக்குச் சென்றுவிட்டார். இப்போது கூட, கலைஞரோடு சேர்த்து அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், எனக்குக் கூச்சமாகவே இருக்கும்.

நானும், இன்னும் ஒரு சிலரும் பேசி முடித்த பிறகு, இறுதியாகக் கலைஞர் எழுந்தார். அவர் என்னைப் பற்றி என்ன பேசப் போகிறார் என்பதை அறிவதற்காக அந்த வளாகத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தேன். பொதுவாக, எதிராளிகளுக்குப் பொதுக் கூட்டங்களில் நாசூக்கான குட்டு வைப்பதில் கலைஞர் நிபுணர். அழைப்பிதழை எடுத்துப் படித்தார். அதிலுள்ள பெயர்களுக்கு முன்னால் தம்பி, உடன் பிறப்பு போன்ற வார்த்தைகளை அடைமொழியாக்கி விட்டு, அந்தப் பெயர்க்கு உரியவர்களைச் சுட்டிக் காட்டினார். அழைப்பிதழில் என் பெயர் இருந்தாலும், சமுத்திரம் அவர்களே என்று அவர் சொல்லவில்லை. இதுதான் என் பேச்சுக்கு அவர் காட்டிய குறைந்தபட்ச எதிர்ப்பு.

நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். செல்வி. ஜெயலலிதா கலந்து கொள்ளுகிற இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் கலைஞரை மறைமுகமாகச் சாடியது போல், அவரைச் சாடினால் என்ன நடந்திருக்கும்? அவரது அதிமுக உடன் பிறப்புகள் சும்மா இருந்திருப்பார்களா? அல்லது இவர்தான் சும்மா இருக்க விட்டிருப்பாரா? இம்பீரியல் ஓட்டலை நான் பார்க்கும் போதெல்லாம், கலைஞரின் மென்மையான எதிர்ப்பும், கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டைக் காத்து நின்ற திமுக தோழர்களின் பண்பாடும்தான் நினைவுக்கு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அல்லாத மற்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தாலும், நான் தாக்கப்படாமலோ அல்லது வசவு வாங்காமலோ திரும்பி இருக்க முடியாது.

இந்தச் சமயத்தில், பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கேயே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா முதல்வராக மாறிய பிறகு, கோவையில் புதிய விமான நிலையம் ஒன்றை துவக்கி வைத்தார். வானொலிச் செய்தியாளராக அங்கே