பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

என் பார்வையில் கலைஞர்



சென்றிருந்தேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கும். சில கசமுசாக்கள். மத்திய விமானத் துறை அமைச்சரான மாதவ ராவ் சிந்தியா, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, கோவை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செ.குப்புசாமி ‘மாகாராஜா சிந்தியா அவர்களே’ என்று முதலில் அவர் பெயரைக் குறிப்பிட்டார். அவ்வளவுதான். அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். குப்புசாமியைப் பேச்சை முடிக்கும்படி வாயதிரக் குரலிட்டார்கள். ஜெயலலிதா, அவர்களின் நடத்தையை அங்கீகரிப்பது போல் பேசாதிருந்தார். இந்த அடாவடி நிகழ்ச்சியை திருச்சி வானொலி நிலையத்தில் முதல் செய்தியாக ஒலிப்பரப்பினோம்.

மீண்டும் கலைஞர் அரசுக்கே வருகிறேன். தமிழக அரசிற்கு, குறிப்பாக கலைஞருக்கு எதிரான செய்திகளை, முக்கியப்படுத்தினேன். அதே சமயம் கலைஞரை கட்சித் தலைவர், முதல்வர் என்ற முறையில் அவருக்குரிய செய்திகளையும் ஒலிபரப்பினேன். ஆனால், கலைஞருக்கு எதிரான செய்திகளே அதிகம். காலையில் ஆறு நாற்பதுக்கு ஒலிப்பரப்பாகும் செய்திகள் மக்கள் மனதில், குறிப்பாக பாட்டாளி மக்களிடம் மகத்தான் தாக்கத்தை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியவை. பொதுவாக, இந்த மாதிரி அரசுக்குப் பாதகமான செய்திகள் வெளியானால், மக்கள் தொடர்பு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருத்தம் - அல்லது மறுப்புக் கொடுப்பார்கள். ஆனால், செய்தியாசிரியர் நான் என்பதால் என்னமோ, என்னுடன் அவர்கள் தொடர்பு கொண்டதில்லை.

கலைஞர் அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் ஒரு ஊழல் பட்டியல் கொடுக்கப் பட்டிருந்தது நான் அத்தனை பாயிண்டுகளையும் ஒன்று விடாமல், ஆனந்தமாகச் செய்தியாக்கினேன். இதற்குப் பதிலளிப்பது போல், அதே நாள் மத்தியானம் கலைஞர் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வரவில்லை என்றாலும் ஒரு செய்தியாளன், தன்மானம் பற்றிக் கவலைப்படாமல், போய்த்தான் ஆக வேண்டும். இல்லையானல், டில்லிக்காரன் தாளித்து விடுவான். ஒரு கட்சி, திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டதால், கலைஞரும் கோட்டையில் முதல்வராகப் பதிலளிக்க விரும்பாமல், கண்ணியம் காத்தார் என்றே நினைக்கிறேன். ஆகையால்,