பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 லா. ச. ராமாமிருதம்

என்னப்பா, நாரத்தம் பச்சடின்னா ஒரு வெட்டு வெட்டுவியே, அம்மா நன்னாவும் பண்ணியிருக்கா, ஆனால் குருவியாட்டம் கொறிக்கறே, உடம்பு சரியில்லையா?”

பிள்ளையாண்டான் படு குவியிலிருக்கிறான். சேவலின் கொண்டைச் சிலிர்ப்பிலிருக்கிறான். பஸ் ஸ்டாண்டில் இவன் கொடி கட்டிப் பறக்கறாப் போல இருக்கு, ஆனால், கண்களில் லேசான மருட்சி-அல்லது என் பிரமையா?

அவன் சொன்னாற்போல், நாங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எனக்கு இந்த உறவு தேவையாயிருக் கிறது. உத்யோக ரீதியில் காம்ப் அல்லது வெளியூரில் கிரிக்கெட் மாட்ச் என்று இரண்டு நாட்கள் சேர்ந்தாப் போல, மது கண்ணில் படாவிட்டால் எனக்கு வேளையே மங்கிவிடுகிறது. திரும்பி வந்ததும் அவனைத் தொடணும் போல ஆசை பெருகுகிறது. வெட்கம், கெளரவம் தடுக் கின்றன.

மது நல்ல பையன்; அண்ட் ஐ ஆம் ஆன் ஒல்ட் மேன்."

என் பெருமூச்சு அவனுக்குக் கேட்டுவிடப் போகிறது. ஆனால், அந்தக் கவலை வேண்டாம். பூமியில் கால் பாவாது அவன் தன் உலகில் மிதந்துகொண்டிருக்கிறான். அவன் புன்னகை, சகஸ்யமும், கனவொளியும் கொண்டு, அவ னுடைய அத்தனை கலகலப்பிலும் அவனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது.

த.இஸ் யூத் உச்சிவெயில் வீட்டுள் வெக்கையின் மயக்கத்தில் ஆவரவர் தம்தம் மூலையில் கண் செருகிக் கிடக்கின்றனர். சந்தடி செய்யாமல், கிணற்றடிக்குச் சென்று எட்டிப் பார்க் றேன். இப்படியும் பேதலித்துப் போகணுமா? மீண்டும் நிகழாதா? பாதாமி மரத்திலிருந்து பறவை எச்சம் உச்சி மண்டைமேல் சூடசய் விழுகிறது. கோபம் பொங்குகிறது. கூடவே அழுகை பயமுறுத்துகிறது.