பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 95.3

வாசற் கதவைத் திறந்துகொண்டு அவள் பிள்ளை வரும் சப்தம் கேட்டது. தனியாய்த்தான் வந்தான். விசுப் பலகை பில் உட்காருகையிலேயே அவன் மனச்சோர்வு வெளிப் பட்டது. கோபத்தில் முகத்தில் கறு ரத்தம் குழம்பி .பிருந்தது.

ங்கேடா டோனே?’’

அவங்க வீட்டுக்கு-

ஏண்டா போனே, போன சிறுக்கித் தானா வராள்,

பெரிய இடத்துப் பெண்ணாயிருந்தால் என்ன பெண்டாட்டி யென்பதை மறந்துட்டாளா? .

"பெண்ணின் சமத்து அவங்களுக்குத் தெரியவேண் உாமா, என்று சொல்லத்தான் போனேன்.”

சொன்னியே என்னவாம்?"

அவங்க பெண்ணை விடமாட்டாங்களாம். அவங்க பெண் வீட்டு வேலை செய்யவேண்டிய அவசியமேயில்லை யாம். நம்ம மாதிரி நாலு தறி கூவிக்குப் போட்டு வேலை வாங்க தெம்பு இருக்குதாம்-’’

ச என்ன, என்ன! பெண்ணின் சமத்துக்கு மேலேன்னா, இருக்குது அவங்க சமத்து?’’

என்னம்மா, அவங்களா பேசறாங்க, பணத் திமிர்ன்னா அப்படிப் பேச வைக்குது பெண்ணைக் கொடுத்துட்டா, மருமகனை விலைக்கு வாங்கிட்டதா நெனைச்சுருக்காங்க போல இருக்குது, மேலே வேலையை ஒட்டு-"

வேலையை ஒட்டு என்று சொல்லிவிடலாம். ஆனால்...

அவன் தாய் சமயலறையில் குழம்பைக் கிளறிக் கொண்டே காத்துக்கொண்டிருந்தாள். அவள் வயிற்றின் கொதிப்பை அவன் நன்றாய் அறிய முடியும். ஆயினும் அதைவிட அவன் தனிமைதான் அவனை உறுத்திற்று சோறு, நாக்கு நுனியில் விஷமாய் மாறிற்று. -