பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 9常

கண்ணாலும் கையாலும் சுட்டிக்காட்டி, குசுகுசுவென்று பேசுபவர் எத்தனைபேர்! வாயைத் திறந்து அவனை ஏசுபவர் எவருமில்லை. ஊருக்கே அவன் வேண்டியவன்

தவிர, அவனை ஏச என்ன இருக்கிறது?

அவனிடம் கொண்டு கொடுத்து சம்பந்தம் பண்ணின வரை தூற்றத் தைரியமுள்ளவருமில்லை. அநேகமாய் எல்லோருமே கூலிக்கு நெய்பவர்கள்தான். ஊரில் முக்கால் வாசித் தறிகள் அவன் மாமனாருக்குச் சொந்தம், ஏறத் தாழப் பேசினால், அல்லது பேசினதாய்க் காதில் விழுந்தால், வாயில் மண்தான். இந்தப் பணம் பண்ணும் வேலைதான் என்ன? பணம் ஒரு தினுசில் மனிதனை முறியடிக்கிறது. பாசம் ஒரு தினுசினால் முறியடிக்கிறது.

இப்பவும் அவளை மறக்க, வேலையில் மும்முரமாய் விழுந்து நெய்துகொண்டே போகையில் அவள் செய்த செய்கையும், வீட்டை விட்டுப்போன விதத்தையும் நினைக் கையில், நெஞ்சில் மூண்டெழும் சினம், அவன் உடலிலும் மனத்திலும் ஒரு பரவசத்தை எழுப்பி வெகு நாழிகை அவனை வேலையில் நிறுத்தி வைக்கும்.

கோபம், குரோதம் இவையெல்லாம் கெட்ட உணர்ச்சி களாயிருக்கலாம். ஆயினும் அவை உடலுக்கும் மனதிற்கும் ஒரு தினுசில் தீவிரத்தைக் கொடுக்கின்றன. அப்படியா செய்தி? எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறாள் பார்த்துடுவோம். ஒரு பெண் பிள்ளைக்கு இவ்வளவு திமிரா, அவள் செய்த காரியத்துக்கு?’’

ஆனால் அப்படி என்ன செஞ்சுப்பிட்டா?" ஒரு சிறு கேள்வி, அடுத்தாற்போலேயே, காலடியில் மண்ணைப் பறிப்பதுபோல் எழுந்து கோபத்தையும் ரோலத்தையும் கிளப்பிக்கொண்டு திடம் பண்ணிக்கொள்ளும் சித்தத்தைக் கலைத்தது. அன்பும், பிரிவாற்றாமையும் பழைய நினைவு களும் சஹிக்க முடியாத வேதனைகள்...

7.سده