பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 夏酶夏

வந்த ஒரு பெண், இத்தனை நாளாய் இங்கே நிலைச்ச ஒரு குடும்பத்தைக் கலைச்சுடறதுன்னு இருந்ததுன்னா, அந்தி அக்கிரமத்துக்கு அடங்கிப்போக என்னால் முடியாது. பெண்ணுக்கும் பெண்ணை பெத்தவங்களுக்கும், முன் புத்தி பின் புத் தி, ஈனமானம் இல்லாமல் போனால், நமக்குக் கடவா இல்லாமே போச்சு? ஊரைவிட்டு ஒடிப்போகும்படி என்னடா பண்ணிட்டோம்?’’

கிழவி நூலை இழைத்துக்கொண்டே பேசிக்கொண்டே போனாள். இழைக்க இழைக்க ராட்டினம் கிர்'ரென்று சுழன்றது, அவர்கள் விதியின் சக்கரமே போல்,

கோழி கூரை மேலே பறந்துபோய் குந்திகிட்டு கொக்கரக்கோ என்று கூவிட்டா, உடனே வீடு அதுக்குச் சொந்தமாயிடுமா? அது அது இருக்கவேண்டிய இடத்திலே இருந்தால்தான் அது அதுக்கு லட்சணம். அவள் இந்த ஊரையே, அரசாளட்டுமே. அதனாலே போன மானத்தைக் கொடுத்துடுமா பணம், இல்லாட்டா புருஷனைத்தான் கொடுக்குமா? வாழாவெட்டி வாழாவெட்டிதானே, எத்தனைபேர் தாங்கினாலும்!

நீயே பார், அவள் வயத்திலே இப்பொழுது வளருதே. நம்ம வீட்டுக் கொழந்தே, அது பிறக்க வேண்டிய தினுசு இப்படித்தானா? இந்த வீட்டுக்கே மூணு தலைமுறையா ஒரே புள்ளை என் செல்லப் பேரனை என் மடியிலே வெச்சுக் கொஞ்சணும்னு எனக்கு இருக்காதா? மாதம் ஏழாச்சு, இன்னமும் நம்ம சொத்து நம்மகிட்ட வந்து சேர்க் கல்லே பாரு! சீமந்தம் பண்ணவேண்டாமா? ஊமைக் கொளந்தே பிறந்தால் என்ன செய்வாங்களோ தெரியல்லே! இது மாதிரி அக்கிரமமாயிருந்துட்டா, அவங்க செய்யற காரியம் ஜரிச்சுப்போயிடுமா?"

மனிதன் தானே தனக்கு இழைத்துக்கொள்ளும் அவஸ் தையை, என்னென்று சொல்வது?