பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் | 63

அன்று அந்திவேளை, வாய்க்காலுக்கும் கழனிக் கட்டு களுக்கும் அப்பாலிருக்கும் சுடுகாட்டுக்குப் போய், அங்கு புதிதாய் எழுப்பியிருக்கும் மேட்டண்டை நின்றான்: திடீ. ரென மனத்தில் ஒரு எண்ணம். பரபரவென்று மண்ணைப் பறித்து, உள்ளே கிடக்கும் பிண்டத்தை எடுத்து ஒரு தடவையேனும் மார்மேல் அனைத்துக்கொண்டால் என்ன? அதன் முகம்தான் எப்படியிருக்கும்?

அவனை எச்சரிப்பது போன்று, எங்கேயோ ஒரு நரி அவிளையிட்டது.

அச்சமுற்று அவ்விடம் விட்டு அகன்றான்.

ஆயினும், நாளுக்கு நாள் புரை ஒடும் புண்போல் ஒரு அசதி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்ன ஆரம்பித்துவிட்டது. வேலையில் மனம் ஊன்றவில்லை. அதற்கு முதல் அறிகுறியாக, அவன் இழைக்கு இழை ஒட்டு கையில், இன்னம் எத்தனை இழை ஒட்ட இருக்கிறது. நெய் கையில் நாடா குறுக்கே எத்தனை தடவை ஓடுது, என்றெல் லாம் அர்த்தமற்று, அசதி மூட்டும் கேள்விகள் உதிக்க ஆரம்பித்துவிட்டன. ஒராயிரம், இரண்டாயிரம் பத்தா பிரம் தடவை-பத்தாயிரமா? ஐயோ இன்னமும் எவ்வளவு நெய்யனும் ஒரு பீஸ் அறுக்க? இன்னிக்கு அறுக்க முடியுமா? தோணல்லே-கொஞ்ச தூரம் நடந்து வருவோம்-’’

மாலை வேளை, மணி நாலாய்விட்டபோதிலும், வெய்யலின் வெப்பம் கடுமை. வாய்க்கால் ஜலத்தில், காலைக் குளிர நினைத்துக்கொண்டு, வயற்புறம் சென்றான். கழனிக்கட்டுக்களில் நெற்கதிர்கள் ரகசியம் பேசுவதுபோல் சலசலத்தன காற்றின் குளுமை, கண்களுக்கும் கொதிக்கும் மண்டைக்கும் இதமாய் இருந்தது ஏற்றக் கிணறில் குளிக்க லாம்போல் தோன்றிற்று.