பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியதர்சனி 5

மரத்து நிழலடியில் ஒதுங்குகிறேன்; ஒடுங்குகிறேன். இந்த வயதில் நீ எனக்கு நேர்வானேன்? இப்படிக் கேள்வி பிறந்ததுமே நீ நேர்ந்துவிட்டாப், உன்னை எனக்கு உண்மையாக்கிக் கொண்டுவிட்டேன் என்கிற எண்ணம் அதன் முழுக்கனத்துடன் என் நெஞ்சின் ஆழித்துள் அமிழ்ந்ததும் உடல் புல்லரித்துப் போனது.

அப்போது நீ நிஜம். உண்மையின் தரிசனம். ஆம், மெய்யும் பொய்யும் அவரவர் மட்டில்தானே! ஆதார நிஜம், பேசிக் ட்ரூத்" என்று ஆயிரம் சொல்லிக் கொண்டாலும் எல்லாமே பார்வைகள், ஆயிரம் பார்வை கள், ஆயிரம் முகங்கள்.

இந்த ரீதியில் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? உன்னை எனக்கு நிஜம் பண்ணிக்கொண்டதனால் வேதனை அதிகரிக்கின்றதே ஒழிய, தெளிந்ததால் தென்பு ஏற்படவில்லை. -

இதோ பார், நான் காய்ந்த சருகு என் உடல் இனி சிதைக்கு உரியது. இந்த நிலையில் நீ என்னுள் உன் பொறியை வைத்து வேடிக்கை பார்ப்பது நியாயமா? நெஞ்சில் அமிர்தம் சிக்கியதுபோல் அழியவும் முடியாது. வாழவும் வழியில்லை. தாங்க முடியவில்லையே!

ஒரு பெரிய கேவல் என்னின்று புறப்பட்டதும் மிரண்ே போனேன். புரண்ட பூமியின் பெருமூச்சு. தாளொனா ஏக்கம். அதன் கபந்தவாய், மிருதுவாய் என்னைக் கவ்வியதும் கண்ணிர் புரண்டது.

நித்யத்வத்தினின்று தெறித்த தருணம் அது சிதறுண்டு நேர்ந்த கவிதை சொல்லுக்குப் பதில் உகுத்த கண்ணிரில்தான் காதல் பூக்கின்றது.