பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

摩鲁曼 வா. ச. ராமாமிருதம்

ஆயினும் கிணற்றில் இறங்குவதற்காக எடுத்துவைத்த கால் அப்படியே நின்றது. அவன் கண்கள் அவன் கண்ட காகசியில் உறைந்து போயின. கிணற்றுள், ஒரு படிக்கட்டில் எவளோ உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தாள் இருபத் திரண்டு வயதிருக்கும். பட்டு நூல் போல் பளபளக்கும் கட்டான உடல். யாரோ பண்ணையாளின் மனைவி போலும். அந்த சமயத்தில் யாரும் அந்தப் பக்கம் வருவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள் செளகரியமாகவே குளித்துக்கொண்டிருந்தாள்: அவன் நெற்றியில் வியர்வை முத்திட்டது. அதுவரை உள்ளே அடக்கி வைத்திருந்த உடலின் வேட்கை திடீரென்று வெளிப்படுகையில், அவன் உடலே கிடுகிடென்று ஆடிற்று வெகு வேகமாய் வீட்டுக்கு, ஒடிப்போய்க் கதவைத் தடாலென்று அறைந்து தாளிட் டான். மிருகம்போல் அவனுக்கு மூச்சு இறைத்தது. மிருகத்தின் வாய்ப்பட்ட இரைபோல் அவன் தவித்தான். மனப்பு:பல்...! -

அதன் அலைகள் ஒய ஒய, அவன் மனத்தைக் கவித்துக் கொண்டிருந்த பனிப்படலமும் கொஞ்சங் கொஞ்சமாய். விலகத் தலைப்பட்டது.

இன்று மாதிரி இன்னொரு தடவை நேர்ந்ததெனில் அவன் மனத்தை மறுபடியும் வெற்றிகொள்வது கடினந்தான். அவன் வயதுக்கு-அதுவும் ஆண்ட-அவனுக்கும் உடல் வேட்கை இயற்கைதான். அதை அடக்கமுடியாத சமயத்தில் அதை முடக்குவதில் எவ்வளவோ விபரீதம், இயற்கைக்கு விரோதம், அவன் தொழிலுக்கே ஹானி. அப்பனிடமிருந்து பிள்ளைக்குப் பரம்பரையாய் வந்து தன்னிகரில்லா தனித் தொழிலான நெசவுத் தொழில். இந்தப் பரம்பரையைக் காப்பாத்த ஒரு பிள்ளை வேண்டும்.

பெண்டாட்டிமேல் ஆசை இருக்க வேண்டியதுதான். ஆனால் ஆசை அறிஞ்சவ தான் பெண்டாட்டி. அன்பை அறியணும்னா அன்பு இருக்கணும். அன்பில்லாதவள்.