பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 宽莎等

இடத்திலே அன்பை வெச்சுட்டு அவஸ்தைபட்டால், பட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான். அவளுடைய அசட்டுத் தனத்துக்கும் அழுத்தத்துக்கும் எல்லையில்லாமல் போனா லும் அவன் பொறுமைக்கு எல்லையுண்டு. இதே மாதிரி தன் இடத்தையும் மானத்தையும் மறந்த பொம்மனாட்டி கிட்ட காட்டற பொறுமை பொறுமையில்லே. அசட்டுத் தனம்தான். இத்தனை நாள் அவள் விசாரத்தை அவன் பட்டுக்கொண்டிருந்தது போதும். இனிமேல் அவள் விசாரத்தை அவளே படட்டும். அவன் கஷ்டத்துக்கு விமோசனம் அவன் கிட்ட இருக்குதேயொழிய அவள் கிட்டே இல்லே. உலகத்தை வெறுத்துட்டுப் போற வயசில்லே அவன் வயது. உலகத்தை ஏன் வெறுக்கணும்? உலகத்தை ஜயிச் சுட்டுத்தான் அதை வெறுக்கணும். அதுக்கு முன்னாலேயே வெறுத்தால் அதுக்குத் தோற்றால்போலதான்.

அனுமான் தன் பலத்தை மறந்ததுபோல், தன்னைத் தான் மறந்து இத்தனை நாள் இருந்ததே அவனுக்கு இப்பொழுது ஆச்சரியமாயிருந்தது. சமையலறையில் வேலையாயிருக்கும் தன் தாயிடம் தீர்மானத்துடன் போனான்.

- அம்மா நாம் இனிமேல் நம்ம வேலையைக் கவனிக்

} ந

கணும்' என்றான். எனக்கு வயசு ஆச்சு வீட்டுக்கு ஒரு

மருமவள் வந்தாகணும். நல்ல மருமகள்..."

ஒரு பெரும் மூச்சு கிழவியின் தொண்டையிலிருந்து கிளம்பிற்று. எத்தனையோ நாளாய் வெளிப்பட வேண்டு மென்று காத்திருந்த மூச்சு.

. நல்ல பெண்ணாகக் கட்டறேன், நம்மை நாட்டாமை பண்ணாமே, வீட்டுக்கடங்கின சரக்காய் எனக்குத் தெரியும். நம்ம பக்கத்து வீட்டுக்காரன் தங்கை பெண். நல்ல நூலிழைக்கிறாள். நல்லா சமைக்கிறாள். நல்லா குடும்பத். திலே உயண்டிருக்கா. தன்னை நல்லா காப்பாத்திப்பாள்.