பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冠爵密 லா ச. ராமாமிருதம்

காப்பாத்தினால் தன்னைக் காப்பாத்திக்

புருஷனைக்

பொம்மனாட்டிக்குப்

கிட்டாப் போலத்தானே? ஒரு புருஷனைத்தவிர என்ன வேணும் ஆண் பிள்ளைங்களுக்குக் கூட பெண்சாதி அவசியமில்லே, ஆனால் பொம்மனாட் டிக்குப் புருஷன் வேணும். புருஷன் இருக்கிறவரைக்கும் தான் அவங்களுக்கு மதிப்பு. நாளைக்கு நல்ல நாளா விருக்குது. ஆள் விடறேன்.”

ஊர் கம்மாயிருக்கிறதா?

இவன் இன்னொரு பெண்ணைக் கட்டினால், அந்த மளிகை வீட்டுப்பெண் கதி என்ன ஆவறது?’’

  • அதுக்கு அவன் என்ன செய்வான்? கட்டின அப்புறம் கூட பெண்டாட்டியா இல்லாமே, மளிகை வீட்டுப் பெண் ணாய்த்தான் இருப்பேன்னு இருந்தால், அப்படியே இருந் துட்டுப் போவட்டும். அதனால் யாருக்கு நஷ்டம்?’’

அவன் தறியில் இறங்குகையில் மறுபடியும் பழைய உற்சாகம் அவன் உடலில் ஊறியது. ஒரு தீர்மானத்திற்கு வருகிற வரையில் தான் அவஸ்தை. வந்துவிட்டால் அப்புறம் அவ்வளவு கஷ்டமில்லை. இத்தனைநாள் அவளில் தன்னை இழந்துவிட்டு, இப்பொழுது தன் மதியால் தன்னைத் திரும்பிப் பெற்றதே ஒரு பெரும் ஆறுதல். அவனை அமுக்கிக் கொண்டிருந்த கேள்வியிலிருந்து தான் மீண்டதே ஒரு ஆச்சரியம். அவ்வனுபவம் சென்று கடந்ததெனினும், இப்பொழுது பின்னோக்கிப் பார்க்கையில்தான், அதன் பயங்கரம் இன்னும் தெளிவாய்த் தெரிந்தது. அவன் கஷ்டம் தீர்ந்தது. இனி அவள் கஷ்டம் தான், அவளே இஷ்டமாய் வரவழைத்துக் கொண்ட கஷ்டம். இஷ்டப்படி படட்டும்.

போனது போகட்டும். இனி மறுபடியும் ஏமாற மாட்டேன். என்னை இனி யாருக்கும் இழக்கமாட்டேன். இனி வருபவளிடம்கூட உஷாராய்த் தானிருப்பேன்.