பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 லா. ச. ராமாமிருதம்

  • 受、 а

காணல் மேல் காதல், ஆகவே உன்மேல் காதல் எனும் எண்ணம் தைரியமாகத் தன்னில் தோன்றிவிட்டது.”

இரண்டு நாட்களாக அவன் மாறிவிட்டான். திடீரென ஒரே அடியாக வதங்கிவிட்டான். மகனே என்ன நேர்ந்தது? உன்னை ஏன் தின்றுகொண்டிருக்கிறாய்? எங்களை, என்னை

வாய்விட்டுக் கேட்க முடியுமா? கேட்டால்தான் சொல் ఫ్రt?"r "?

ஆபீஸ் வேளைக்கு வீட்டை விட்டுப் போகிறான். ஆபீசுக்குப் போகிறானா? வேளை தாண்டி வீடு திரும்பு சிறான். வீட்டில் இருட்டு மூலைகளில், மொட்டை மாடி யில் வாழ்கிறான்.

ாலேஜ் பஸ்சைத் தேடிப் போலையே, பஸ் ஸ்டாண்டில் உன் கொடி விழுந்துவிட்டதா? அப்படித்தான் தோன்று:

நேற்று மாலை, மாடு அவளுடைய நந்தவனத்தில் புகுந்துவிட்டது. அவள், கத்திக்கொண்டே லொங்கு லொங் கென்று ஓடிவந்துகொண்டிருக்கையிலேயே அது போகிற போக்கில், செடியோடு ஒரு தொட்டியை இழுத்துச் சென்று தொட்டி உடைந்து ரோஜாச் செடி மாட்டின் வாயில், சாவகாசமாய் நின்று மென்று தின்றது.

அங்கேயே உட்கார்த்து ஒரு பாட்டம் அழுதாள். வாய்விட்டு, நெஞ்சின் கனம் தீர அழுகைக்கு எங்கே

டோவேன்? நல்ல அழுகை, நல்ல ஸ்னானம்.

நான் தோளில் சாய்ந்தோ, மடியில் முகம் புதைத்து அழிக்கூடியவர் யாவரும் மறைந்துவிட்டனர். இப்போது அவர்களை அழைப்பது என் துராசை.