பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 芷寂*

இந்த நாளில் இரண்டுபேர் சம்பாதித்துமே போத, வில்லை என்பதுதானே பொதுவான புகார்? உனக்குத் தெரியாததல்ல" என்று முனகினேன்.

அதனால்? பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றுவது புருஷன் பாடு. அதில் நான் ஏன் புகனும் பெண்டுகளின் வேலை இன்னதென்று இயற்கையே கோடு கிழித்து விட்டிருக்கே அதுதான் கிராமவாசத்தின் தத்துவம்அல்லது கோளாறா?’’ இப்படிச் சொல்லிவிட்டு அவள் உன்னைப் பார்த்த பார்வை...

பாஸ்கர், உன் மனைவியை நீ பார்க்க உனக்குச் சொல்லிக் கொடுப்பதன் அதிகப்ரசங்கித்தனம் எனக்குத் தெரியாததல்ல. அதற்குக் கண் வேண்டும். ஆனால் கண் ஆணுக்கு உனக்குப் பொழுதில்லை அதுவும் தெரிகிறது. எவனோ ஒரு மார்வாடியிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாய், இடம் மாறவும் உனக்கு மனம் இல்லை. Economicsஇல் இதை Commercial inertia என்பார்கள். அவன் நன்றாய்த் தான் கவனித்துக்கொள்கிறான் என்று உன் மனைவியும் உனக்குச் சிப்பக் கட்டுக் கட்டுகிறாள். இருந்தாலும் உன் யோக்யதைக்கேற்றபடி ஒரு நல்ல ஸ்தாபனத்தில்-உனக் காக இல்லாவிட்டாலும்- -

யார் என்ன செய்தாலும், செய்யக் காத்திருந்தாலும், அதைத் தடுக்க, விதி என்று இருக்கத்தான் செய்கிறது போலும். உன் விதியின் பெயர் அனு, உனக்கு உதவி செய்யவும் என்னை விடமாட்டாள். அவளுடைய சகஜ பாவம், புன்னகை, சிரிக்கையில் மூக்குத்தண்டின் சுருக்கத் தின் பின்னால் ஒரு அழுத்தம், இறுமாப்பு. அவளுக்கென்று ஒரு குணம்-எனக்குத் தெரிகிறதே! என்னிடமிருந்து ஒரு தித் திப்புப் பண்டப் பெட்டி, கேக் பெட்டி, பழக்கூடைஊஹ”ம், No Thank you!’’ ஆனால் வரும்போதெல் லாம், நான் டிபன், சாங்கோபாங்கமா சாப்பாடு-நானும் சாப்பிடுகிறேன். என் ரோசம் எங்கே போச்சு: The Witch,