பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 夏葱姆

அன்று தன் தாத்தாவையும் பாட்டியையும் பற்றிச் சொன்னாளே, நினைவிருக்கிறதா? அவள் சொன்னதைவிட, அவள் பேசினது இருக்கே, இன்னமும் அதன் Wondement எனக்கு ஒயவில்லை. ஆனால் ஒண்னு நான் ஒப்புக் கொள்ளணும். சிந்திக்க, ஆச்சரியப்பட எனக்கு நேரம் இருக்கிறது. நினைத்து நினைத்து என் தன்மையின் உண்மை யின் கவிதையும் என் சிந்தனையுடன் கலந்த குழைவுக்கு ஒரு தரிசன ருசி வந்துவிடுகிறதோ?

சதாத்தாவையும் பாட்டியையும் பார்த்த நினைப்பு எனக்கில்லை. நான் குழந்தையாம். ஆனால் என்னில், பாட்டியை அப்படியே உரிச்சு வெச்சிருப்பதாகப் பார்த்தவா சொல்றா.

ஒருநாள் தாத்தா விடிசாலை, வெள்ளி முளைச்ச வேளைக்குத் தன் பங்கு ஆற்றுப் பாய்ச்சலை மேலத்தனம் பண்ணப் போனவரைப் பத்து மணி வேளைக்கு நாலுபேர் சுமந்து வந்து கூடத்தில் விசுப்பலகையில் கிடத்தினார்கள், கழனிக்கட்டுச் சேறில், தன் நினைப்பற்றுக் கிடந்தாராம். Stroke. அந்த நாளில், கிராமத்தில் அதற்கென்ன பாஷையோ? ஒருநாள் இரண்டு நாள் கோமா இல்லைத் மூணு வருஷம் என்ன சொல்றேள்?

தாத்தா வருஷத்துக்கு ஆறு தெவசம் பண்ணுவாராம். அத்தனையும் நின்றுபோய், பிதுர்க்கடன் ஏறிப்போச்சு. இப்போ எனக்குத் தெரிஞ்சே கிராமத்தில் துபாய் போறேன்” ஸ்வுதி போறேன்’னு அங்கெல்லாம் எந்த சாஸ்திரி கிடைக்கிறான்? தாகத்துக்கே பெட்ரோல் தான். காக்காய்க்குப் பிண்டமனும் வைக்கலாம். ஆனால் அங்கே காக்கா இருக்கோ? என்க்குத் தெரியாது. ஓ, அங்கங்கே problems இருக்கு ஆனால் அதுக்கெல்லாம் கிராமத்துலே பயப்படுவா. கிராமத்துலே வளர்ந்தவள்தானே நானும்! நானும் பயப்படறேன். எல்லாமே பெரியவாள் காட்டற