பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 置器夏

உன் நிலையில் எந்த மாறுதலும் இல்லை.

டாக்டருக்குப் போன் செய்ய என்ன இருக்கிறது? உண்மையில் நாங்கள் சொல்ல வேண்டும் என்று அவர் எதிர் பார்க்கிறாரோ? அவருக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டதை நாங்களே நிதரிசனத்தில் தெரிந்துகொள்ள இப்படி ஒரு வழி.

கட்டையாக் கிடந்தபடி பாஸ்கர், என்ன பாடு படுத்து கிறாய்?

மணி பத்து, பதினொன்று...

எனக்குப் பசியென்று தெரியவில்லை. அவளும் அதுபற்றி ஏதும் முற்படவில்லை. -

லேசான குளிர் ஒன்று தெரிந்தது, என்னையறியாமலே சிவிர்த்துக்கொண்டேன். ஆ ன ல் இது பனிக்காலம் அல்லவா! ஆனால் இப்போல்லாம், எதுதான் ரீதியில் நேர் இறது? தொலை தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருக்கிறது.

ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. அனு எழுந்துபோய் அவைகளை அழுந்த மூடி, கொக்கிகளை மாட்டிவிட்டு வந்தாள். உடனேயே வாசற்கதவைத் தட்டும் சத்தம். நான் எழுந்தேன்.

வேண்டாம்' கட்டளையில் அவள் குரல் கணிர், ஒரு வேளை டாக்டர்

తె ?

அது டாக்டர் இல்லை.

பின்னே யார்? ஆனால் நான் கேட்கவில்லை. முதுகுத் தண்டு சில்”- -

அவள் குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீலம் மின்னிற்று. ஏதோ வகையில் மாறியிருந் தாள். அவளே சுடர்போல் தாழ்ந்து, தணிந்து, ஆனால் அமைதியான திடத்தில், விளக்கெதிரே அமர்ந்தாள்.