பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. லா, ச. ராமாமிருதம்

மின்சாரம் தோற்றுப்போய், வட்டமேஜை மீது ஏற்றி நட்டு வைத்திருக்கும் மெழுகுவர்த்தி ஒளிகூடத்தின் இருளைக் கூட்டிக் காட்டுகிறது. ஒரு மூலையில் அவள், ஒளியும் ஒலியும் அநியாயமாப் போய்விட்டதென்று புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

ஏதோ ஒரு அறை வாசலிலிருந்து மது வெளிப்படு கிறான். என்னை நோக்கி வருகிறான். என்னவோ சொல்ப்ை போகிறான். என் தோள் மேல் கை வைக்கிறான். காத்திருக்கிறேன், எங்கள் நிழல்கள் சுவர்மேல் வினோத தர்த்தனம் புரிகின்றன. அவன் உதடுகள் நடுங்குகின்றன. {ஷவரம் செய்து எத்தனை நாட்கள் ஆயினவோ) விழிகள் நிறைகின்றன. கன்னம் கன்ற வழியும் அவன் கண்ணிர் என் நேஞ்சில் ஆவி கக்குகிறது. திரும்பிப் போகிறான். அந்தத் தருணம் வந்து நின்று. தயங்கி, பொரியாமல், அதன் கனத் துடன் திரும்பிப் போய்விட்டது.

காதல் எனும் புரையோட்டம் காதல் எனும் துரோக ந தி. ஆனால் pனநதி. காதல் எனும் வென்னிர் வீழ்ச்சி. அதன் தழும்பிலிருந்து மீளமுடியாது..."

மாலை நேரங்கள் பயமாயிருக்கின்றன: பயங்கள் தலை விரித்தாடும் வேளை அப்போத்தான்.

என்னை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். மனதைச் சாட்டையாலடித்துக் கேட்கிறேன். மனம் மருள்கிறது. உடலின் வேட்கை அன்று இது. மனம் துணைக்குத் தவிக் கிறது. ஒரு பாதி குருதி சொட்ட தனிமையின் ஏக்கத்தில் நிற்கிறேன்.

ஒரு எண்ணம் தோன்றுகிறது. இதோ, இந்தக் கிணற்றடி யில் பாதாமி மரத்தின் கீழ், பாறாங்கல்மீது நான் உட்கார்ந் திருக்கையிலேயே என் எண்ணத்தின் தீவிரத்தில், கிணற்றில்