பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 36 வா, ச. ராமாமிருதம்

பாஸ்கர், அனு: சக்தியில் நீ மீண்டாயா? காக்கை உட் காரப் பனம்பழம் விழுந்ததா? Crisis எனும் மதில்மேல் ஆனை சரியான இடத்தில் குதித்ததா? ஈதெல்லாம் பதிலே கிடைக்காத கேள்விகள். அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, கேள்விகள்மேல் சுமை ஏற்றும் மழுப்பல்கள், பதில் ஆகா. கண்ணாமூச்சி கண்டுபிடிப்பு ஆகிவிடாது.

ஆனால், பாஸ்கர், காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய், காவியமாகவும், கவிதையாகவும், கதைகளாகவும், பெருமூச்சாகவும்: abouri, I want him— எனக்கு அவன் வேணும்-இப்படியும் தேவையெனும் பெயரில். இப்படியும் ஒரு மகத்தான மூர்க்கம் உண்டா? என்ற வியப்பு எழுந்ததகணமே-இந்த மூர்க்கத்தைக் கண் கூடாகக் கண்டதே ஒரு மகத்தான அனுபவம்தான். இந்த வணும் பொருளாய் விளங்கும் உனக்குக்கூட இந்த தரிசனம் கிடையாது-ஆனால் எதேச்சை வழிப்போக்கன் எனக்குக் கிடைத்துவிட்டது.

இந்த உணர்வு தன் பட்டாசுத் திரிக்கூத்தை என்னில் ஆடியதக்கணமே, என்னுள் கடல் பொங்கி துரை வழுக்கி, I felt in love with your wife. ALGolf stair Go manunu%ir வெறிச்சு, அதன் முழு பயங்கரத்துடன் கரடி தழுவியதும். நான் பொடிப் பொடியாக நொறுங்கிப்போனேன்,

Ah the beautiful fiocci of tears!

“Tea, glassrāff? or Coffee?”

இனி எழுத அதிகம் இல்லை. ஏன் ஏதுமில்லையென்றே. சோல்வேன்.

தரிசனம் என்பதே ஒரு தடவைதான். அதுபற்றித் திரும்பத் திரும்ப மிச்சமெல்லாம், பிறரையும் தன்னையும் ஏமாற்றிக்கொள்ள, அதற்குக் காட்டும் கிச்சுகிச்சு.