பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 교?

இதற்குப்பிறகு உன் வீட்டுக்கு நான் வருவது தானாகவே குறைந்துபோயிற்று. நீகூடக் கேட்டாய், உன்னிடம் என்ன சொல்வது?

அவள் கேட்கவில்லை கேட்கமாட்டாள். அன்று நான் அவள் உயிரை நிர்வாணமாகப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்று இருக்கிறதா? என்ன என்று கேட்கிறாயா? இருக்கிற தென்று எனக்கே இப்பத்தானே தெரிகிறது: ஆத்மா என்கிற வார்த்தையை வேணுமென்றே விலக்குகிறேன். ஆத்மாவைப் பற்றி என்ன கண்டேன்?

உயிரின் நிர்வாணத்தில் Sex கிடையாது. i love hel" Terribly. அவள் நினைப்பில் பற்றி எரிகிற்ேன. ஆனால் அவள்மேல் எனக்கு இச்சையில்லை. Strange!

Lịgru: G už Frálssparr; The end of the chapter for me.

இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்தபோது, இதைத் தபாவில் சேர்த்ததும் ஊரைவிட்டுப் போய்விடலாம் என்று உத்தேசித் திருந்தேன். எழுதி முடித்ததும் அது end of the chapter ஆகாது என்று தெரிகிறது. எங்கு போனாலும் என்னோடு இருக்கிறேனே கேட்கிறேன். உண்மையில் இங்கே என்ன இருக்கிறது? முதலில் உண்மை என்பதே என்ன? எனக்கு இப்போ தோன்றுகிறது, Truth is an. explosion.

வெடித்த பின்னும் மிச்சமிருப்பின் அது உண்மையான உண்மை அன்று.

George Sawnders என்று ஒரு சினிமா நகrத்ரம். தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு அவன் இறந்துபோனபோது ஒரு குறிப்பை விட்டுவிட்டுப் போனான். -

“I arr; bored with life”

தன் உயிரின் உரிமையை முறையாக உபயோகித்தவன் என்று சொல்வேன்.