பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம்

முள்வேவியுள் வீடு வீட்டுக்கு வெளியே, வேலிக்குள் சிமிட்டி மேடைமீது கால்களை நீட்டியபடி, நாற்காலியில் சாய்ந்தபடி ஏதோ குருட்டு யோசனை.

கிணற்றடியில் பிள்ளையாண்டான், லாடம் அடிக்க வீழ்த்திய மாடைப்போல் யமாஹாவை’க் கிடத்தி என்னத் தையோ நோண்டிக்கொண்டிருக்கிறான்.

பால் இன்னும் வரவில்லை. காப்பி காணாமல் மண்டை பிடியில் அவள் எல்லார்மேலும் எரிந்து விழுந்துகொண் டிருக்கிறாள். w

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. ஆனால் இந்த சமயம் வாய் திறந்து ஒன்றுக்கொன்று வார்த்தை தடித்துப்போனால், தாங்கிக்கொள்ள இப்போதெல்லாம் சக்தியில்லை.

என் ஜன்னலுக்கெதிரே செம்பருத்திப் பூ ஒன்று கைக் கெட்டா உயரத்தினின்று சிரிக்கிறது. உன் பெருமையும் ராங்கியும் இன்று ராத்தாளாது. நாளைக் காலை, தலை யவிழ்ந்து, அலங்கோலமாய் இதழ் குலைந்து காலடியில் கிடப்பாய்.

ஒ, இந்த எண்ணத்தில் எனக்கும் சந்தோஷமென்று நினைக்காதே. நான், என் மாலையில் இருக்கிறேன், ம்ாலை யென்ன, இருட்டே வந்தாச்சு.