பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 罩盛蓬

போகட்டும். மறுகட்சி: , உதிரும் இலைகள் ஒரு அடி ஆழத்துக்குக் குப்பை உள்ளே பாம்பு இருந்தாலும் தெரி யாது. பெருக்கிப் பெருக்கி இடுப்பு விட்டுப்போறது. இடி விழுந்த மரம்தானே!"

அழிக்கும் கட்சிதான் ஜெயிப்பு. எப்பவுமே அப்படித் தானே!

வருடக்கணக்காக பார்வை பழகிப்போன மரம். இப்போ அதன் இடத்தில் அதைக் காணாமல் திக் கென்கிறது.

லார், எக்ஸ்க்யூஸ்மி, உள்ளே வரலாமா?’’ நினைத்ததற்கும் சீக்கிரமே கவிஞ்கிபோச்சு. வாசவில் ஒரு உருவக்கோடு.

கண்ணாடி போட்டால்தான் நான் ஆள்" என்று சொல்லிக்கொண்டே, மேடைமீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுக்குமுன்

'Don't bother-’ உள்ளே வந்து என் கையிலிருந்து மெதுவாகப் பிடுங்கி மேடைமீது வைத்துவிட்டு, மேடையில் உட்கார்ந்தாள்.

Hope you don't mind–’’ gotiuig ogo upg, ifiéeavirida, நுழைந்து உங்கள் நேரத்தை ஆக்ரமிப்பதை."

கண்ணாடியை அணிந்துகொண்டேன் (அவள் சொன் னால் கேட்கனுமா என்ன?).

குரலின் திடத்துக்கு உடம்பு ஆகிருதியில்லை. தோளில் மாட்டியிருந்த பையை (டிபன் சம்புடம்)க் கழற்றிப் பக்கத் தில் வைத்துக்கொண்டாள். அழகென்று அடித்துச் சொல்ல முடியாதானாலும், முகத்திலும் பாவனைகளிலும் ஒரு இயல்பான நேர்த்தி தெரிந்தது. அவள் உட்கார்ந்திருந்த வாஇல், தெரு விளக்கின் வெளிச்சம் அவள் முகபாவங்களை அங்கஅசைவுகளை ஏற்றிற்று.

நாம் இதற்கு முன் சந்தித் திருக்கிறோமா?"