பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖曼盛 லா. அ. ராமாமிருதம்

சுடலைகளே ஒருநாள்-இல்லை, படிப்படியாக இவர்களை விழுங்கி விட்டார்கள். சட்டமும் அவர்கள் பங்கிலிருந்தது. கூட்டுக்குடும்பம் உடைஞ்சு சுக்கல் சுக்கலாச் சிதறிப்போச்சு. அதில் ஒரு சிதறல் நாங்கள். நாங்கள், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் சிரமம்தான்.

அப்பாவைப் பார்த்தாலே பயமாயிருக்கும். புரியாத பயம், அப்பா முகத்தில் கோபம் தனியாத் தெரியல்லே. ஆனால் உள்ளுரத் தன்னைத்தானே தஹிச்சுண்டு-ஓ, உங்களுடைய பாத்திரங்களில் இதுமாதிரி அலாமிகள்

愛」gar。""

ஆனால் அப்பாவையும் முழுக்கச் சொல்வதற்கில்லை. நல்ல காலம் பார்த்தவராச்சே! சாந்தவர்கள் சமாதானமாக மாட்டார்கள். ஆகவே அப்பாவின் முன்னிலையிலிருந்து அம்மாதான் எங்களுக்குத் தஞ்சம்.

அப்பாவுடன் தானும் இழந்த வாழ்வு, அம்மாவை அப்பா அளவுக்குப் பாதிக்கவில்லை. பாதிக்கவேயில்லையோ, அம்மாவோ வேறே. தனியென்றே சொல்லவேண்டும். அவளும் நல்ல இடத்திலிருந்து வந்தவள்தான். வீட்டுக்கு ஒரே பெண். செல்லப்பெண் நிறைய சீரும் செனத்தியுமாத் தான் வந்தாள். ஆனால் குடும்பத்தின் ஆடிக்காற்றில் அடிச்சுண்டு போனதைத் தனியாக் கணக்கிட முடியுமா? கனக்கிடலாமா?

ஒ, இப்படிக் கொட்டி ஆத்திக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன் என்று எண்ண வேண்டாம். நான் எந்தத் திட்டத்துடனும் வரவில்லை. பேச்சுப் போறது அப்படி, அதற்கு நான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என் அம்மாவைப்பற்றிப் பேசறேன். நீங்கள் அம்மாவைப்பற்றி நிறைய எழுதியிருக்கேள். எழுதறேள். உங்கள் எழுத்தம்மா லோடு என் அம்மா அங்கங்கே இடிக்கறா. அல்லது அப்படி தினைச்சுக்க எனக்குப் பிடிக்கறதோ என்னவோ."