பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 149

நோக்கிச் சென்றாள், யாரோ விளித்தமாதிரி. சுவாமி அலமாரியில் அகல் சுடரின் மங்கிய ஆடும் வெளிச்சத்தில் கூடத்தின் இருள் தீவிரம் கொண்டது. என்னவோ அவன் -உதடுகள் அசைந்தன, ஆனால் எனக்குக் காது கேட்டது.

வானத்தின் கண்ணிர் பூமியைக் கழுவுகிறது." எனக்குப் புல்லரித்தது. e • ĝuu Irepçiffoo

  • அம்மா!’ ஒடிப்போய்க் கட்டிக்கொண்டேன். என் தலையைச் செல்லமாக் கோதிக்கொண்டே பாவம் சியாமm-உன் தலையில் பெரிய கனத்தைச் சுமத்திட்டுப் போறேன். உஷ், அழாதே-அதெல்லாம் அப்புறம்,

அப்புறம்-’

அப்படியெல்லாம் சொல்லாதேம்மா! எனக்குப் பயமா யிருக்கு என்று தேம்பினேன்.

  • பயப்படாதே. அனைத்துக்கொண்டாள். பயந்தால் உன்னை விட்டுடுமா என்னை விட்டுடுமா? நீ சமத்து, எனக்குத் தெரியும்.”

பயமாயிருக்கேம்மா! அழுதேன்.

அவள் பார்வை ஒளி கூட்டிக்கொண்டு என்னை இந்த ஜன்ம மட்டுமல்ல, அதற்கும் முற்பிறவியிலிருந்தே அடை யாளம் கண்டுகொண்ட கனிவுடன் என்மேல் குனிந்தது.

ஒண்ணு கேளு கலைமகளில் ஒரு கதை வந்திருக்கு அதைப் படி, மனசுக்குத் தெளிவு ஏற்படும். சொல்லிக் கொண்டே என்மேல் தாங்கியபடி படுக்கைக்குச் சென்று சாய்ந்தாள். இப்படித்தான் படிச்சு, மனசைத் திசை திருப்பிப் பள்ளம் விழுந்த இடத்தை இட்டு நிரப்பிக்க வேண்டியதுதான் வாழ்க்கையில் வேறு என்னதான் இருக்கு? கண்ணை மூடிக்கொண்டாள். அசதி ஆயிட்டுது.