பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼等罗 லா. ச. ராமாமிருதம்

ஆச்சு; இருபது வருடங்கள் ஒடியாச்சு தம்பி, இங்கே மூச்சுத் திணறுகிறது" என்று வடக்கே பிழைக்கப் போய் விட்டான்.

அப்பா இப்போ படுக்கையாகிவிட்டார். கண்ணுக்குத் தெரிய, நாளொரு இம்மி தேய்ந்துக்கொண்டே வருகிறார். அம்மாவின் மறைவிலிருந்து நான் எப்பவோ தேறிவிட்டேன். ஆனால் இவரால் ஏன் முடியவில்லை? எனக்கு ஆச்சரிய மாவேயிருக்கிறது. கண்ணிர் அருவியாகவே மாறிவிட்டார். முதலில் வடிக்க உடம்பில் இவ்வளவு கண்ணிர் இருக்க முடியுமா? இல்லை கண்ணில் கோளாறா? இல்லை டாக்டர் பார்த் தாச்சு. கண்ணில் ஒண்ணுமில்லை. மனசில்தான் வெச்சிண்டு தவிக்கிறார். சொல்ல முடில்லே. நாக்கு இழுத்துவிட்டதே! அப்பாவைப் பார்த்தால் பரிதாபமா யிருக்கு-’’

- நான் நினைக்கிறேன் ஒருவேளை-’’

சடக்கெனக் குனிந்து மூர்க்கமாக என் வாயைப் பொத்தி னாள். ஒருவேளை என்ன்-எந்த வேளையும் வேண்டாம். தான் எதுவும் தெரிந்துகொள்ள ஆசைப்படவில்லை சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது. அவை தெரி யாமலே, உங்கள் கதையின் ஸ்வயம்புவிங்கம் போல, குப்பை செத்தைகளுக்கடியில் புதைந்தே கிடக்கட்டும். தரிசனம் வேண்டாம்.

விக்ர்ர்'ரென்று எழுந்து போய்விட்டாள்.

அப்புறம் அவள் இந்தப்பக்கம் வரவேயில்லை. - இ

-இதயம் பேசுகிறது