பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல்

அவர்கள் பஸ்ஸில் ஏறி தங்கள் இடத்தில் அமர்ந்த போது அவர்களுக்கு முன்னராக பஸ்ஸில் இருவரே இருந்தனர். எதிர் சீட்: ஐரோப்பிய ஜோடி.

கவனத்தை உடனே ஈர்த்தது அம்மாதின் தலைமயிர். அந்தப் பிசுபிசு அடர்த்தி மட்டுமன்று சாயத்தில் தோய்த்து எடுத்தாற் போன்ற அதன் சிவப்பு அம்மாதிரி கெட்டிச் சிவப்பு, கூந்தலில் அவன் பார்த்திருக்கமாட்டான்.

அவளோடு இருந்த ஆடவனின் தலைமயிர் பழுப்பு. சருமத்தின் செக்கலோடு இழைந்த செம்பட்டையில் பென்சில் கோடு மீசை எடுப்பாய்த் தெரியவில்லை. புருவம் செம்பட்டை. கண் ரப்பை மயிர் கூட செம்பட்டை.

பொறுமையிழந்தவனாய், அவ்வப்போது கைக்கடியா ஏத்தை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச் சைகையே இவன் பார்வையை அவன் கைக்கடியாரத்துக்கு இழுத்தது. பொறாமை நெஞ்சைப் பிராண்டிற்று. அந்தக் கடியாரத்துக்கு ஆசைப்படவே அந்தஸ்து வேண்டும். தீபாவளிக்கு எச். எம். டி. போடுவதாகப் பேச்சு. தலை தீபாவளி இன்னும் எங்கேயோ இருக்கிறது. அப்படியே இருந்தாலும், இந்தக் கடியாரம் மாதிரி கனவில் கூட நினைக்க முடியாது. தன்னை அறியாது ஒரு "உஸ்' அவனிட மிருந்து கிளம்பிற்று.