பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

望む姿 லா. ச. ராமாமிருதம்

பக்கத்தில் அவள்மேல் திரும்பிய அவன் பார்வையின் அணைப்பில், அதன் ரகசியச் செய்திகளில் சுமதி தலை குனிந்தாள் வெட்கத்தில், மகிழ்ச்சியில், வெற்றியில்,

மஞ்ச உறவின் மர்மமே இதுதான். இந்த விளையாட்டில் கெலிப்பு இருவருக்குமே. அவர்களுள் தனித்தனி நினைப்பு, ஒருவருக்கொருவர் உளம் கவர்ந்த கள்வர். கலியான தம்பதிகள் என்கிற நினைப்பே அப்புறம்தான்,

அவர்கள் உட்கார்ந்துகொண்டதும், வெள்ளைக்காரி யின் கண் நீலம் வரவேற்பில் கடலாகியது. கூடவே சங்கோஜம், அவர்களைப் பார்த்துக்கொண்டே, புன்னகை யுடன் அவள் துணையின் காதில் கிசுகிசுத்தாள்.

“My wife says—”

உடன் இருந்தவரை அவர்கள் சம்பாஷணை ஆங்கிலத் தில்தான் நடைபெற்றது. சுமதிக்கு பேச்சுப் புரிந்தது. ஆனால் பங்கு கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அவளிடம் தில் இல்லை, பாஷையுமில்லை. எஸ். எஸ். எல். சி.யில் கோட்’ அடித்ததும், ட்யுடோரியவில் சேரவோ, தொடர்ந்து படிக்கவோ மறுத்துவிட்டாள். அவள் மக்கு இல்லை. ஆனால் வணங்கவில்லை. அப்பா வுக்குக் கோபம், ஏமாற்றம், வருத்தம் படிப்பு முடித்து, ஒரு குட்டெழுத்தும், தட்டெழுத்தும் தேறி, எங்கேனும் ஒரு கம்பெனியில் சேர்ந்தால் கலியாணத்துக்கு எவர்சில்வர் * சீருக்கேனும் சம்பாதித்துக்கொள்ள மாட்டாளா என்கிற சபலம். இந்த நாளில் கலியாணம் எங்கே சுருக்க ஆகிறது?

ஆனால் சுமதி ஜக்க வில்லை. ஆனால் கலியாணமும் அவளுக்கு சுருக்கவே கூடிவிட்டது. ப்ரபுவுக்கும் அவன் பார்த்த முதல் பெண்ணும் அவளே, கடைசிப் பெண்ணும் அவளே. பிள்ளை வீட்டாரும் செலவு விஷயத்தில் ரொம்ப சிரமப்படுத்தவில்லை. 'சுமதி அதிர்ஷ்டக்காரி.?-வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் அப்படித்தான் பேச்சு.