பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் 157

ருவியதும், ப்ரபு பிரமித்துப்போனான். திடீரெனப் பற்றிக் கொண்டாற்போல் அவள் கேசம் ஜ்வாலை சிவப்பில் தி.கு. திகுத்தது. அதுவே அவனுக்கு-ஏன், பஸ்ளில் அருகாமையில் இருந்தவர்களுக்குத்தான்- ஒரு காட்சியாயிருந்தது.

ரொட்டி அடுப்பின் உட்புறத்தின் கணகணப்பின் சிவப்பு.

அவன் கண்களுக்கு எழாமல் அவன் வீணே அடக்க முயன்ற திடீர் மாறுதலைக் கண்டு அவள் புன்னகை புரிந் தாள். ஆமாம், நான்தான் ஒரிஜினல் சிவப்புத்தலை' என்றான். இதுவே தங்க நிறமாயிருந்தால், என் ஜனங் களுக்கிடையே எனக்கு மவுசு கூடியிருக்கும். ஆனால் என் கணவர் என்னை மணந்ததே என் சிவப்புத் தலைக்குத் தான். இல்லையா பில்?’’

லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென். கைடு தொண்டை யைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான். "என்னைப் பரிச்சயம் செய்துகொள்கிறேன். என் பெயர் மதுகர். மைசூர் சர்வகலாசாலையில் ஆய்வு மாணவன். இது எனக்குப் பார்ட் டைம்.’’ சிரித்தான். கஷ்டப்பட்டு சிரிப்பு,

நாம் இன்று, ஆம் நான் உள்படத் தான், மைசூரிலிருக்க ரொம்ப பாக்யசாலிகள். மைசூர் சரித்திரப்புகழ் பெற்ற, ஸ்தலம். மைசூர் எனும் அரண்மனை நகரம்-’’

ஒரு நாளா, இரண்டு நாளா? சொன்னதையே சொல்விச். சொல்லி, தானே ஆக்கிக்கொண்ட கட்டங்களில் அதே சிரிப்பைச் சிரித்துக்கொண்டு, அதே ஆச்சரியங்களைப் பட்டுக்கொண்டு, பாஷையில் அதே தப்புக்களைப் பண்ணிக் கொண்டு-வாய்ப்பாடு ஒப்பிப்பது போன்ற அவன் வர்ணனை உற்சாகம், உயிர் உப்புசப்பு அற்று-பிரயாணி கள் அவன் சொல்வதற்குச் செவிமடுக்கிறார்களா என்கிற ஆவல் கூட இல்லாமல், ஏதேதோ தகவல்கள். வருடங்கள், வருடங்களில் சம்பவங்கள் அவன் வாயினின்று ஆங்காங்கே உதிர்கையில் அவனுடைய சொற்கடு சீக்கிரமே அலுப்புத்