பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் A 6.3

சாலையோரம் உள்ளே தள்ளி, ஒதுக்கமாக, ஒரு சோலை நடுவே ஒரு ஹோட்டலுக்கெதிரே வண்டி நின்றது. இங்கே, க சிலைச் சிற்றுண்டிக்குப் பதினைந்து நிமிஷம் தங்கும்’ என்று கைடு சொல்லிவிட்டு ஹோட்டவில் மானேஜர் அறையுள் மறைந்துவிட்டான். இங்கே வியாபாரமே இது போன்ற உலா வண்டிகளை நம்பித்தான். பண்டங்கள் ருசி யாக இருந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அவசியமு மில்லை,

ஆனால் அந்த ஐரோப்பிய தம்பதிகள் ரசித்துச் சாப் பிட்டார்கள். துனிவிரலால் தோசையை விள்ள அவர்கள் முயற்சி சிரிப்பு மூட்டியது. தோசை விள்ளல் ஒன்று சாம்பார் ஈரத்துடன் வில்லியம்ஸின் சொக்காயில் பொத்தான் பட்டை மீது பட்டுத் தெறித்துப் பாண்டிலும் விழுந்துவிட்டது. கைக் குட்டையால் துடைக்க முயன்று திட்டு பரவலாய்ப் படர்ந்தது. வில்லியம்ஸ்"க்கு முகம் சுளித்தது.

ஆனால் மேரி குஷி'யிலிருந்தாள். ஒ, திஸ் இஸ் நைஸ், இதை எப்படிச் செய்வது சொல்வீர்களா? சுமதி யைப் பார்த்துக் கேட்டாள்.

சுமதியை அவ்வப்போது கலந்துகொண்டு ஆட்டுக்கல், குழவி, அரிசி, உளுந்து, தோசைக்கல், தோசைத் திருப்பி என்று ப்ரபு அடுக்கிக்கொண்டே போனதும், அவள் சிரித்துக் கொண்டே, வியர்த்தத்தில் இரு கைகளையும் விரித்து விட்டாள்.

ஓ, எனக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம். இதற்காகவே நான் லண்டனில் இந்தியர்களை சினேகம் பிடிக்கவேண்டும். எனக்குத் தோசா வேண்டுமானால் வெட்கம் பார்த்து முடியாது. சிரித்தாள்.

காப்பி வாயில் வைக்க வழங்கவில்லை. ஆனால் அவர் கள் விரும்பிக் குடித்தார்கள்: