பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱给翰 லா. ச. ராமாமிருதம்

சுவர்க்கம், இந்திரலோகத்தில் நடமாடப் போகிறீர்கள். உலகத்தில் ஒன்பதாவது அதிசயத்தோடு இழையப் போகிறீர் கள். வயதானவர்கள் வயதை மறந்துவிடுவார்கள். இங்கே வயதானவர், ஆகாதவர் என்பதே இல்லை. எல்லோரும் வயதுக்கு வந்தவர்களாகி விடுவார்கள். என் வழிகாட்டலும் வர்ணனைகளும் விளக்கங்களும் இங்கே தோற்றுவிடுகின்றன, அத்தனையும் அதிகப்பிரசங்கம், அவரவர் தமக்கே கண்டு கொள்வார்கள். இதோ பிருந்தாவனம் பாருங்கள்."

சொல்வி முடிப்பதற்கும் பஸ் உள்ளே நுழைந்து குதிரையை லகான் பிடித்தமாதிரி பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சட்டென்று நின்று சமைவதற்கும் சரியாயிருந்தது. பிரயாணிகள் இறங்கிக் கலைந்தார்கள்.

இதுதானா பிருந்தாவனம்? நன்னாயிருக்கு. செடி, பூ, புதர்கள், ஃபவுண்டன்கள் எல்லாம் சுத்தமா. ஒழுங்கா, நல்ல பராமரிப்பில், விளக்குப்போட்டு-அழகாயிருக்கு என் கிறதைத் தவிர தனிப்பட்ட முறையில் ஆஹா ஒஹோன்னு எனக்கு ரசிக்கத் தெரியல்லேன்னா, எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்னு நான் நினைச்சுக்கணும், ஊரெல்லாம் சுத்திட்டு, உடம்பும் மனசும் களைச்சுப்போய், அப்ப டா எங்கானும் சாய்வோமான்னு இருக்கற நிலைக்கு முன்னால், காலையிலேயே இது முதல் ப்ரோக்ராம்மா இருந் திருந்தால், மனசு வேறேமாதிரி இருந்திருக்குமோ என்னவோ. இதைத் தான் அடிக்கடி சினிமாவில் பார்த்துடறோமே! இந்தச் செடி, பாத்திகள் நடுவே லவர்ஸ் ஒடி ஒளிஞ்சு, ஒருத்தரை பொருத்தர் பாத்துண்டு, மேலாக்கைப் பிடிச்சு இழுத்துண்டு ஆடிண்டு, பாடிண்டு, கும்மாளம் அடிச்சுண்டு, நடப்புக்கும் அவாளுக்கும் சம்பந்தமேயில்லாமே...

சுமதிக்கு சினிமா மோகம் கிடையாது. கிழம், கட்டை கள் கூடப் பித்தாய்ப் பிடித்து அலையும் இந்நாளில் சுமதி அவள் வயசுக்கு அதிசயப்பிறவி, வக்ரம்னு கூட கருதப்