பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றல் 189

'இன்று எங்களுடைய இத்தனை சந்தோஷமான நேரத் துக்கு உங்களுக்கு எங்களுடைய மிக்க மிக்க நன்றி. காலி யாகக் கடந்த ஒரு டாக்ஸியைப் பார்த்து விரலைச் சொடுக்கி விட்டு, குலுக்கக் கை நீட்டினான். கை குலுக்கினர். அவளும் கை நீட்டினாள்.

சடக்கென ப்ரபுவின் கழுத்தைச் சுற்றித் தன் கையை வளைத்து இழுத்துக்கொண்டு அவன் கன்னத்தில் ஒரு. முத்தம் பொறித்தாள்.

ஷாக்,

டாக்ஸி உராய்ந்தாற்போல் வந்து நின்றது.

குட்பை. லோ லாங்!’’ இருவரும் ஏறிக்கொண் டார்கள். வண்டி நகர்ந்து வேகமெடுத்தது.

ப்ரபுவும் சுமதியும் ப்ளாட்ஃபாரத்தில்-ஸ்தம்பித்தபடி நின்றார்கள்.

ஷாக்.

வண்டி போய்க்கொண்டேயிருந்த சில நிமிடங்களுக்குப் பின் கேட்டான்.

g to ஏன்-?’ 3. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவள் மூகம் திரும்பாமலே, அவன் பாபை நினைவு மூட்டினான்." ஒ, ஆமாம், பாப். போன வருடம் ஹாவாய் அருகே, பசிஃபிக்கில் ஹெலிகாப்டரில், தனியாகக் காணாமல் போய் விட்டான்.

அவள் தம்பி,

விண்டி வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. குளிரைத் தடுக்க இறக்கிய ஜன்னல் கண்ணாடிமேல் அவள் முழங்கால் களைக் கட்டியபடி மூலையில் சாய்ந்துகொண்டிருந்தாள். கண்ணிர் தாரை பெருகிய வண்ணம்.