பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் H 7 3

ரிஷிகேஷில், ஒரு பாறை உச்சியிலிருந்து ஒரு அருவி வயிறங்குவதைப் பார்த்தேன். பாறையையே நூல் கட்டி அளப்பதுபோல், அத்தனை சன்னம்: காற்றில் அலையும் ஜரிகைபோல், பாறைமேல் அதன் கதியில் நாணிக் கோணி நலுங்கி நெளிந்து...

பாறைமேல் தாவரங்களின் அடர்த்தியிலிருந்து ஒரு மான் வெளிப்பட்டது. அருவி விளும்பில் நின்றது. குட்டி அல்ல, அந்த ஜாதியே அப்படித்தானோ? நவராத்ரி பொம்மை. சுருண்ட மாவிலை போன்ற காதுகள், கொம்பு கள் இல்லை. அதன் உயரத்தில் என்னைச் சற்று சிந்தித்து விட்டு, சாவகாசமாகத் திரும்பிப் பச்சையுள் மீண்டும் மறைந்தது. அப்படித் திரும்புகையில், அதன் பின்னழகில் மனம் பறிபோனேன். சொப்புகளைப் பதித்தாற்டோல், இறுக்கமான, வழுவழுத்த சப்பைகளின் மேல் மொட்டை வால் ஆடி ஆடி அழைத்தது, எனக்கு அங்கங்கள் முறுக் கேறின.

ஒஹோ, மானோடு காதலா?

ஏன், ஆகாதா? சீ, தூ! உன் வயதில்-வெட்கமாயில்லை? காதலுக்கு வெட்கமுண்டா என்ன? இல்லை, என் வயதில் காதல் எண்ணமே ஆகாதா? சிந்தா நதிக் கரையோரம் உட்கார்ந்து, என் காயிதக் கப்பல்களை விட்டுக்கொண்டிருக்கிறேன்.

பெரிய கோவில் பிரம்மோற்சவம் போயிருந்தோம்: காஞ்சிபுரம் அருகாமையில், கிராமத்தில்இஅப்பா ஹெட் காஸ்டர்க

இரண்டு மூன்று நாட்கள் வேறிடத்தில் தங்கப்போற சந்தோஷம். அதற்கு ஏற்பாடு தடபுடல். ஜீ.என் அன்றைய (பன்னிரண்டு) வயதில் அந்த இருப்புக்கொள்ளாமைக்கு