பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் 275

மறுபடியும் பொடக் பொடக் தக்கடா புக்கடாவின் விழுந்தாச்சு.

ஒரு பாழ் மண்டபம்-டோல் கேட் உடனேயே சின்னக் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் மதில்- முடியவே முடியாதோ? ஒரு வழியா முடிஞ்சு, ஆடிசன் பேட்டை தேர் முட்டி இரட்டை மண்டபம், ராஜவீதி வந்தாச்சு பெரிய காஞ்சிபுரம், எங்கள் இடம், சன்னதித் தெருவில் நாலுகால் மண்டபத்து எதிரிலேயே, தெருவெல்லாம் அந்தந்த வீட்டுக் கெதிரே செம் மண்ணிட்டு பிரம்மாண்டமான கோலம்,

சவீடு வந்தாச்சு, வண்டியை வீட்டு இறங்கறோம். கோவில் பட்டறை வெடி கேக்கறது. நெஞ்சு துள்ளறது.

வாசவில் வீட்டுக்கார மாமாவும், மாமியும் வரவேற்கக் காத்துண்டிருக்கா

வரவேண்டும் வரவேண்டும்! எங்கள் குடிலை மிதித்து அனுக்ரஹிக்க வேண்டும் (ஐயோ இலக்கணமே, ஐயோ போலியே) இரண்டு கைகளையும் ஆராதனையில் காட்டிய படி மாமா வீட்டுக்குள்ள அழைச்சுண்டு போறார்.

தாங்களுக்கு இந்த அறை ஏற்பாடு பண்ணப்பட்டிருக் கிறது, அசெளகர்யங்களுக்கு rமிக்கணும். உறவு மனுஷாள் வந்துட்டா பிரம்மோத்ஸ்வமோன்னோ? அ. து வு ம், நாளைக்கு அஞ்சாம் நாள் கைலாச வாஹனம் வெள்ளிக் கவசம் முதல் புறப்பாடு.”

நாங்கள் வாசலுக்கு ஒடுகிறோம். ஜனம் நெரிசல் ஆரம் பிச்சாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல வெறும் தலைகளும், இரைச்சலுமாக பன்மாதிரி ஒரு பெரிய மொத்தை ஆயிடும். விட்டுக்கார மாமா ஏதோ ஸ்தோத்திரம் சொல்லியபடி, லாந்தர் சிமினிகளைத் துடைச்சுண்டிருக்கார். குறுக்கே குழந்தைகள் விழுந்தடிச்சுண்டு ஒடறப்போ, வாயில் வரத் தகாத வசவுகள் ஸ்தோத்தரத்தோடு கலக்கிறது. அதோ ஒஒ கொல்லையில் கிணறுமேல் தாம்பு தொங்கறது.