பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வா. ச. ராமாமிருதம்

டைய கீழ் உதடு, அதனுடைய ஒரு மாதிரியான சிவப்பு ரஸ் ஓட்டத்துடன் பளபளத்திது. சற்றுத் தடித்த உதடு, பற்கள் சற்றே பெரிசு; ஆனால் வரிசை.

மாமா தாம்புக் கயிறை விடுங்கோ குரல் தாழ்ந் திருந்தாலும், அதில் அழுத்தம் தடித்தது. மாமா தோற்றுப் போனார். குடத்தைக் கிணற்றின் சுவற்றுக் கட்டைமீது நிறுத்தி, அதன் கழுத்தில் தாம்பைச் சுருக்கிட்டு, கிணற்றுள் விட்டு மொள்ளக் குனிந்தாள். பின்னல் பாம்புபோல் தடித்துக் கழுத்தில் சரிந்து நழுவிக் கிணற்றை நோக்கித் தொங்கிற்று: - :ஏ குந்தளே, என்ன பண்ணறே, போனால் போன இடம்தானா?” உள்ளிருந்து குரல், புகாரில் உரத்த மொண மொனப்பில்,

எதோ வந்துட்டேன் அத்தே' இடுப்பில் குடத்தை ஏற்றிக்கொண்டு, உள்ளே விரைந்தாள், அவள் கண்டசதை யின் வெண்மை, மஞ்சள் வெய்யிலில் கண்ணைப் பறித்தது. அதைக் கொசுவம், மறைத்து மறைத்து விளையாடிற்று.

என்னுள் ஏதோ நேர்ந்துபோச்சு. என்னென்னு: புரியல்லே. ஒரே சமயத்தில் பயம், சந்தோஷம், துக்கம், பரபரப்பு எல்லாம் சேர்த்து அழுத்திற்று. ஒரே சமயத்தில் இத்தனையுமா? பல் தேய்த்தேன். காப்பி குடிக்க மறந்தேன். எதுக்கோ எரிச்சலோடு அம்மா முதுகில் ஒண்னு வெச்சாள். அதுவும் வலி தெரியல்லே, திண்ணைக்குப் போய் உக்கார் துட்டேன். இந்த ஜன நடமாட்டம், கோபுரம், பஜனை கோஷ்டிகள் கடைகண்ணி எல்லாமே தூர நிழல்கள். சுவத்துக்கு வெளியே சத்தங்கள். அப்படியும் மனசில் உரைக் கல்லே. ஒரு இடத்தில் இருப்புக் கொள்ளல்லே. மிதந்: துண்டே நடக்கறேன். சாதம் வேண்டியில்லே. என்ன உனக்குக் கேடு வந்துடுத்து?’) மிதந்துண்டு புழைக்கடைக்குப் போறேன். பின்கட்டு வழிப்போக சாக்கு. அவள் கண்ணில் படல்லே. ராrஸ் உடம்பில் பாட்டி குறட்டை விட்டுண்டு துரங்கறா.