பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星8岱 லா. ச. ராமாமிருதம்

யதும்...அப்பப்பா உடல் சிலிர்த்துப்போச்சு ஆனால் திடீரென்று அம்பாளிடத்தில் வேறு முகம் தோன்றிற்று. கோண வகிடு. பளபளக்கும் உதடுகள். மோவாய்க் குழியில் ஒரு மரு. எழுதினாற் போன்ற புருவங்கள். யாரை அப்படித் தழுவிக் கொண்டிருக்கிறாள்? நெஞ்சு தடுமாறிற்று. அங்கு என்னால் இருக்க முடியவில்லை. அகன்றேன்.

வாசற்கதவு திறந்திருந்தது. யாருமில்லை. ஆனால், இந்தப் பக்கம் இது ஒன்றும் புதிசு இல்லை. பின்கட்டுக்குச் சென்றேன். -

இருந்தாள். துணை முட்டினாற்போல் உட்கார்ந்து

கொண்டு, மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு, என்னைப் பார்த்ததும் முறுவலித்தாள்.

ஏண்டா பையா, கோவிலுக்குப் போகல்லே? எல்லாரும் போயிருக்காளே!’

ானக்கு நா எழவில்லை. வெற்றாக நின்றேன்.

சரி வா, இப்படி உக்காரு கொஞ்சநாழி பேசலாம்.'

உட்கார்ந்தேன்.

என்ன அப்படிப் பார்க்கறே?’ சிரித்தாள். எனக் கென்ன கொம்பா முளைச்சிருக்கு?’

மேலுதட்டில் கறுகறுன்னு அரும்பு கட்டியிருக்கு. ஆனால் இவளுக்கு நன்னாயிருக்கு.

  • உற்சவம் பார்க்க வந்திருக்கேளா? வீட்டுக்காராளுக்கு சொந்தமா? எங்கேருந்து வரேள்? எல்லாருமே வந்திருக் கேளா? அம்மா, அப்பா அண்ணன், தம்பி எத்தனை பேர்? உனக்கு அக்கா தங்கச்சி இருக்காளா? நான்தான் பேசின் டிருக்கேன். ஏன் வாயே திறக்கமாட்டேன்கறே! ஊமையா?”