பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் 夏岛夏

எனக்குப் பேச வேண்டாம். எனக்கு ஒண்ணுமே வேண்டாம். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். ஆனால், இதை எப்படி உன்னிடம் சொல்வேன்? சொன்னால் என்ன புரியப்போறது? எனக்கே என் நிலை புரியல்லியே! இருட்டிலே தங்கச் சங்கிலியிலே குத்து விளக்கு தனியா ஆடறது. அதில் சுடர் டான்ஸ் ஆடறது சந்தோஷமாயிருக்கு பயமாயிருக்கு...என்னவோ தூக்கமும், துக்கமுமா வரது.

ஆமா என்னை ஏன் பையா என்கறே? கோவமா வரது உன்னைவிட ஒரு பத்துப் பன்னிரெண்டு வயசுதானே சின்னவனாயிருப்பேன்.

உன் கண் முழுக் கறுப்பு இல்லை. வெளிர் மஞ்சளும், நீலமும் கலந்து பளப்பள. இவ்வளவு கிட்ட, கொஞ்ச சக்ராஸ் கூட. அதனால் என்ன? எதனால்தான் என்ன. என்ன உளச்றேன். இல்லை, இது உளர்றல் இல்லை. இது ஏதோ பாஷை புரியல்லை, பயமாயிருக்கு!

குழந்தை அழுதது. அதை செளகரியமா மடியில் கிடத்திக் கொண்டு ரவிக்கையை நெகிழ்த்திவிட்டுக் கொண் டாள். காம்பில் பால் துளித்தது. அவள் என்னைச் சட்டை செய்யவே இல்லை. மேலாக்கைக் குழந்தை தலைமேல போட்டு மூடிக்கொண்டாள் :

என்னடா வெறிச்சு இதையே பார்வை. திடீரெனச் சீறினாள் என்ன அக்ரமம்டியம்மா. தீசத்தனத்தைப் பார்த்தியா? இந்த பிஞ்சிலேயே இப்படி முத்திப் போய்-'

அவளுடைய கோபம் கூட எனக்குப் பெரிதாயில்லை: ஆனால், அவள் கோபத்தில் கையை வீசி ஆட்டுகையில் அதில் ஆறாம் விரல்கட்டை விரலிலிருந்து அசிங்கமாத் தொங்கிற்று. என்னுள் என்னவோ இடிஞ்சு சரிஞ்சுது: அங்கு விட்டு ஓடினேன். அவள் வசவு துரத்திற்று. ஒடிப்