பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏94 லா, ச. ராமாமிருதம்

டிடன் என்னவோ அமர்க்களந்தான். அடுத்து நாராயணன் கொண்டுவந்த அந்தக் காபி இதுவரை நான் எங்கும் அருந்தியதில்லை. இனிமேலும் அருந்தப் போவது மில்லை. இது கணேஷ் பவனின் போணிக் காபி. இதுபோல் இங்கேயும் இனி கிடைக்கப் போவதில்லை. டிகாக்ஷனையும் பாலையும் ஒன்று சேர்க்கும் வேளை ஏதோ ராசியில் நேர்ந் திருக்கிறது. அந்த ராசி திரும்ப நேராது. எதுவுமே திரும்ப நேர்வதில்லை.

நாராயணா'

பேரைச் சொன்னதிலே அந்த அந்தச் சமயத்துக்கு என்ன என்ன கட்டளையென்று நாராயணனுக்கு வாசனை யிலேயே தெரியும் போலும். சட்டென வெள்ளி விபூதி மடலைக் கொண்டுவந்து கொடுத்தான். நானும் இட்டுக் கொண்டு அவர்களுக்கும் இட்டேன். இருவரும் மீண்டும் சேவித்து எழுந்தனர்.

நான் பரம சந்தோஷம் ஆனேன். இனிமேல் கீழே போய்க் கவனிக்கனும் உத்தரவு வாங்கிக்கறேன். சுவாமி கள் அவசரப்பட வேண்டாம் நன்னாயிருந்து சிரமப் பரி தாரம் பண்ணிண்டு-’’

காஷாயம் கட்டவில்லை. தலையை மழித்துக் கொள்ள வில்லை. ஆனால் எனக்குப் பட்டம் சூட்டியாச்சு; அவரவர் மனசு அவரவரது இன்று விழித்த வேளை இப்படி. என் நடையைத் தொடர்கிறேன். இல்லை, என் நடை தொடர் இறது. காரணம் தெரியாத உள் பூரிப்பில் நெஞ்சு வெளியே குதித்துவிடும்போல் தாவுகிறது. நான் ஏன் ஸ்வாமி? தேஜஸ்? இத்தனைக்கும் ஒருவேளைதான் ஸ்ந்தியா வந்தனம்; அதுவும் ஸ்திரமில்லை. 108 காயத்ரிதான், அதுக்கே இத்தனை மவுசா? அப்போ தினம் 1998க்கு எப்படி இருக்கும்? அர்த்தமே இல்லாத குருட்டுக் கணக்கில் மனம் இறங்கிவிட்டது. ஆனால் மனசை யார் கேட்பது? மனசை மனசாலேயே அடக்க முடியல்லையே!