பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*盔烈& லா ச. ராமாமிருதம்

எங்கு வந்திருக்கிறேன்? சாலையோரம் என் வலப் பக்கத்தில் என்னுடையே ஒரு வாய்க்கால் வந்துகொண்டிருக் கிறது. குழைந்து குழைந்து, இழைந்து, இழைந்து, வளைந்து வளைந்து நெளிந்து நெளிந்து தொடர்ந்து தொடர்ந்து, இதன் விசுவாசம் உயிர்கொண்டு எனக்கு ரொம்ப வேண்டி யிருக்கிறது. பிடித்தமாயிருக்கிறது. காவேரி வாய்க்கால் தான்.

பேர், ஊர், பரம்பரை, மூலம்- எல்லாம் உங்களுக்குத் தான் அவசியமாயிருக்கின்றன. ஏனோ? இதில் என்னத் தைக் கண்டீர்கள்? எனக்கு ஏதுமே இல்லை. இதோ பாய்ந்து: கொண்டே இருக்கிறேனே-மேலே ஆகாசம், கீழே பூமி. இரவு வேளைக்கு என்மேல் சந்திரிகை என் அலைபாயவில் சிதறிய அதன் நிழல் சுக்கல்கள் என் ஒட்டம்தான் என் வழி. என் பிராணன், என் பலன், என் ஆதி. என் அந்தம். என் பாஷை, என் எல்லாமே வேறெதும் அறியேன்: வேறெதும் வேண்டேன். ஆனால் உங்கள் பாஷையிலேயே உங்களுக்குப் பேசிப் பார்க்கிறேன். அதுகூட ஒரு ப்ரயத்தன. மாக இல்லை, அதுவும் என் ஓட்டத்தில்தான்...

மனப்ரவாஹத் தில் மணிப்பிரவாளம்,

வயல்களில் கதிர்கள் கனத்துச் சாய்ந்து பொன்னிறத்தில் அறுவடைக்குக் காத் திருக்கின்றன, வான விளிம்பின் முத்தத்தின் தானத்தில் பூமி ஒரு பெரிய கன்னமாகப் பொற் பிழம்பு குழம்புகிறது. மண், பெண், பொன் மூன்றுமே ஹே பூமா நீயேதான்.

வாழைக் கொல்லைகள் இலைகள், பசும்பொன் தகடு களாக, தாம்பாளங்களாக, தட்டாமாலை சுற்றும் பாவாடை யில் கிழிசல்களாகக் காற்றில் ஆடுகின்றன. வாழ்வே, ஏமாந்துபோன சமயங்களின் கோவை போன்று, மனதில் ஏதோ ஏக்கத்தைத் துரண்டுகின்றன. ஏதோ ஓர் உண் மையை, ஒருவேளை என்னுடைய உண்மையைத்தான்ோ, நிர்வாணத்தில் பார்க்கிறேன். வெட்கமாயிருக்கிறதா?