பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 2:} {

கிறது. நான் இவ்வேளைக்கு வழிபடல் வேண்டுமென்று ஆண்டவனுக்கே விருப்பமானால், அது என் பாக்கிய மல்லவா?

கோயிலுக்கு வெளியே திருக்குளத்தில் கை கால்களைச் சுத்தி செய்துகொண்டு உள்ளே போகிறேன். துவஜஸ்தம்பத் தருகே ஒரு குட்டித் துணில் தொங்கிய குடுக்கையிலிருந்து விபூதியை எடுத்துப் பூசிக்கொள்கிறேன்.

கோயில் காலியாகத் தோன்றுகிறது. ஒரே இருட்டு: தரை கரடு முரடு. ஆனால் கர்ப்பகிருகத்தில் சங்கிலியினின்று தொங்கும் பெரிய வெண்கல அகலில் சுடர், அதுவும் துணை விளக்கிலாது-லிங்கமும் அதுவும் ஒன்றுக்கொன்று துணைஅந்த வெளிச்சத்தில் சுவாமி இருளிலிருந்து மங்கலாகப் பிதுங்குகிறார். ஆவடையாரைச் சுற்றிய அழுக்குத் துணி மீது ஒன்றிரண்டு பொன் அரளிகள்,

சாமிக்கும் வளப்பனாக அம்மன் நிலை. சுள்ளி பொறுக் கும் சிறுமியாட்டம் கிழிந்த பாவாடை முழங்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டு, வடிவமும் வாளிப்பால், சரியான நாட்டுக் கட்டை. கோவில் பராமரிப்பு இவ்வளவு குறைவாக இருக்க முடியுமா? இல்லை, கோயில் மஹாத்மியமே, அம்மையும் அப்பனும் இத்தனை பரதையாக இருப்பதுதானா? நம் ஐதீகங்களை எதுவும் சொல்ல முடியாது. கதையும் அப்படி யும் திரும்பிவிடுவதுண்டே!

உள் பிராகாரத்தைச் சுற்றிவிட்டு வெளிவந்ததும் நடராஜர் சந்நதியில் குருக்கள் உட்கார்ந்திருந்தார். பக்கத் தில் தாம்பாளத்தில் விபூதி, குங்கும் மடல்கள். எதிரே ஒரு கூடை. அதில் நான்கு பொட்டலங்கள் இருந்தன. நெருப் பைக் குளிப்பாட்டின மேணி.

விபூதி குங்கும ப்ரசாதம் வாங்கிக்கொண்டேன்.

ஏன் சாமியாரே, பசிக்கல்லியா? பட்டைசாதம் வாங்கிக் கோமேன்!”