பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2434 லா ச. ராமாமிருதம்

என் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறான். வெயிலில் நீலக் கண்கள் கூசுகின்றன. தலை தங்க மோதிரக் குவியல் வேர்வை விட்டுக்கொண்டு, மேனி, ஒரு பொன் ரோவில் தகதகக்கிறான், அழகான பையன்.

அவனுடைய கப்பல் சரியாக இல்லை. அவனுக்குச் செய்யத் தெரியவில்லை. நான் உதட்டைப் பிதுக்குகிறேன். சுற்றுமுற்றும் பார்க்கிறேன். செய்து காண்பிக்க, குப்பைக் காயிதம் ஏதேனும் தென்படாதா? அவனுக்குப் புரிந்து விட்டது. சடேரென்று பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை உருவி நடுப்பக்கத்தைக் கிழிக்கிறான். ஆட்சேபிக்க எனக்கு நேரமே தரவில்லை. இந்தக் காலத்துப் பையனில்லையா? துணிச்சலுக்குக் கேட்கணுமா?

Spoisport ஆக இருக்காதே இது இவனுடைய நேரம். இப்போ நீயும் இவன்தான். பெரிய கப்பல் என் விரல்களி னிடையினின்று புறப்படுகிறது. பேப்பர் நல்ல தடுமன்: ஆதலால் கப்பலும் திடம்.

கப்பலைப் பார்த்ததும் பையனுக்குப் பரபரப்புத் தாங்க வில்லை. தன்னைத் தழுவிக்கொண்டான். எகிறிக் குதித் தான் என் கையிலிருந்து பிடுங்க முயன்றான், அமைதிக்கு அவனைக் கையமர்த்தி, கப்பலைத் தண்ணிரில் விட்டேன். அவனிடம் கொடுத் திருக்கலாம். ஆனால் என்னுடைய குழந்தைத்தனம் தலைதுாக்கிவிட்டதே!

கம்பீரமாக ஒரு திரும்புத் திரும்பித் தன் சமனைக் கண்டு கொண்டு, கப்பல் நகர்ந்தது. அதன் பயணத்தில் எங்கள் இருவரின் கவனங்களும் ஒருமித்தன.

ஆனால் அதன் கம்பீரம் நீடிக்கவில்லை. வாய்க்காவின் ஒட்டம், தன்போக்கில் அதை இழுத்துக்கொண்டது. எங்கள் கை எட்டலைத் தாண்டிவிட்டது. சாய்ந்து, சரிந்து, பிரிந்து, அலங்கோலமும் அவமானமுமாகி, தட்டாமாலை சுற்றி, தண்ணிருள் போய்விட்டது. -