பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛爵8 லா, ச. ராமாமிருதம்

மோனம், ஒரு சரடு. என்னை, நானாக அவனை’, அவளை, வாய்க்காலை, வாய்க்கால் வழி அதன் தாய் நதியை, வேளையை, கவியும் இருளை, இதுவரை கடந்து போனதை, இப்போ நிகழ்ந்துகொண்டிருப்பதை, இனி எதிர் நோக்கியும், எதிர்பாராமலும் வரப்போவதை, யாவதையும் கோத்த உள்ளோட்டம்,

மோனம் ஒரு காவல்.

மோனம் ஒரு விடுதலை,

மோனம் ஒரு சுருதி.

நடந்துகொண்டேயிருந்தவர், சட்டென யாரோ தடுத்து நிறுத்தினாற்போல், நடுவழியில், எதிருக்கெதிர் நின்றனர். அவன் கையை, அவள் பற்ற அவள் நடத்திய வழியே அவன் சென்றான்.

தண்ணிரில் இறங்கிக் கடந்து, எதிர்க் கரையேறியதும் அடர்ந்த புதர்களை அவள் மறுகையால் விலக்கியதும், அங்கே அடக்கமாய் மறைவாய், பறவைக் கூட்டின் உட்புறம்போல், சுற்றிலும் புதர் சூழ்ந்து, சிறு வட்டமான மணற்பாங்கு. அவள் உட்கார, எதிரே அவன் அமர்கிறான்.

விழிகொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந் தவள். திடீரெனக் கையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, குலுங்கிக் குலுங்கி அவள் உடல் குலுங்கிய குலுக்கலில், அங்கங்கள் தனித்தனி விண்டுவிடும்போல்

ஈதென்ன மடை திறந்தது? அவள் கண்ணிர் அவன் நெஞ்சில் விழுந்தது. அவனுக்குத் தொண்டையை அடைத்தது எப்படித் தேற்றுவது? புரியாது திகைத்தான்.

இரு கைகளையும் ஏந்தித் தாலாட்டினான். தோள் மேல் சார்த்திக்கொள்வதுபோல் தன் இடது மார்பை இரு கைகளாலும், ஒன்றின் கீழ் ஒன்று பொத்தினாள். அப்படியே