பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் 2:09

ஊஞ்சாடினாள் சட்டென அவன் கைகளைப் பற்றி இழுத்து, தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டாள். அவள் வயிற்றுக் கொதிப்பில், அவன் உள்ளங்கைகள் கன்றின.

நான் என் செய்வேன்? என்னால் என்ன செய்ய முடியும்? அவளை அலட்டிய புயல், படிப்படியாக அடங்கியது. அவளுடைய விரித்த கைகள், துவண்ட மலர்கள் போல் மடியில் கிடக்க கைகளை மூடித் திறந்து, மூடித் திறந்து, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அவளை அழகு என்று சொல்வதற்கில்லை. ஆனால் விழிகள் கரை புரண்ட ஆழிகள்.

மல்லாந்து, அவனைத் தன்மேல் இழுத்துக்கொண்டாள். அவள் முகத்தில் அழைப்பு இல்லை. சிரிப்பு இல்லை, ஏதோ விதியின் அவசியம் இருந்தது.

மரங்களில் தொங்குவன விழுதுகளா, பாம்புகளா. இருள் சரங்களா? நகrத்ர ஜாலக் ஒரு சமயம், சிறு வெளிச்சம், உள்ளே இருட்டு.

அழுது அழுது வீங்கிச் செவந்துபோன ஒரு மாபெரும் செவ்விழிபோல, மரங்களின் அடவியின் பின்னணியில் அம்புவி எழுகிறது. அவிழ்ந்த அவள் கூந்தல் அவ்வப்போது அவன் முகத்தின்மேல், கருமேகமாய்க் கவிந்தது.

ஆத்மா என்பது என்ன? எல்லாப் பாதிப்புகளையும் தாண்டிய, ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதார நிலை என்ப தெல்லாம் இருக்கட்டும். அந்த நுண்ணிய தர்க்கங்களுக்கு அவன் தன்னைத் தகுதியாக நினைக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை, அது ஒரு ப்ரக்ஞை நிலை என்றே. அறிவான்.

பி.-14