பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 லா, ச. ராமாமிருதம்

உடல் இல்லாமல், ப்ரக்ஞைக்குச் செயல்பாட்டுக்கு வழி

யில்லை. ப்ரக்ஞையில்லாமல், உடலும் சவம், ஆகவே, ஒன்றுக்கொன்று இன்றியமையாத உறுதுணை. அதே சமயத்தில் ஒன்றுக்கொன்று வெளியீட்டின் வேதனையில் ஒன்றையொன்று காயப்படுத்திக்கொள்கிறது. அவளுக்கு ஏமாந்த தாய்மையின் தவிப்பு. அவனுக்கு அவன் தனிமை யின் சுமை. அவரவருக்கு அவரவர் காயம் அதனாலேயே ஒருவருக்கொருவர் காயம். காயத்தினின்று புறப்படும் pவ நதி.

காலமெனும் ஜீவநதி,

பிரக்ஞை உடலை மீட்டுகிறது.

ஸ்ரிகமபத நி

நித்யா லோலெள

வித வித கானமு

மோன கானத்தின், உச்சஸ்வரத்தில், மூர்ச்சையில் மூழ்கிப் போனான்.

அவனி'ல் இருந்து, நான் மீண்டதெப்போ?.

என் கையின் துழாவலுக்கு அவள் பக்கத்தில் இல்லை. முழு விழிப்பில் எழுந்து உட்கார்ந்தேன். எப்போது போனாள்? எங்கே? ஏன்? திரும்பி வருவாளா? மாட்டாளர். இல்லை, இதுவரை எல்லாமே கனவா? மண வில் ஏதோ கைக்குத் தட்டுப்படுகிறதே, என்ன?

டவில்வர் வளையத்தில், ஒரு சாவி, மெல்லியதாய் மாட்டுக் கொம்பில் செய்தது. அவள் ஆடை நெகிழ்ச்சியில் விழுந்திருக்கிறது. ஆகவே நடந்தது கனவு அல்ல. நிலா ஒரிக்கிறது. இந்த நனவின் ருசுவை வைத்துக்கொண்டு அவளை எங்கே தேடப்போகிறாய்? எந்தப் பூட்டைத் திறக்கப்போகிறாய்? .