பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம்

இன்று வெள்ளிமலை உச்சிக்கு வானம், விதானம்.

நட்சத்திரங்கள், தங்களை தோரணங்களாத் தொடுத்துக் கொண்டு ஊஞ்சல் ஆடின. கூட்டம், ஜேஜேவென நெரிந்தது. தேவர்களுடன் அசுரர்கள் தோளோடு தோள் உராய்ந்தனர். அவனுக்கு எல்லோரும் ஒன்றுதான். கருணாமூர்த்தி. அவனுடைய புன்னகைக்கு அர்த்தம் கிடையாதா? அல்லது கண்டுபிடிக்க முடியாதா? ஏமாறா தீர்கள். திரிபுரத்தை எரித்த புன்னகை. அவன் புன்னகை மன்னன். அந்தக் குஞ்சிரிப்பு இன்னும் சற்று விரிந்தது, இஷ்டப்பட்ட செயலோடு, அது சட்டென அதன் முழுமை யின் பக்குவத்தில் விழ, அமைதல் எனும் அம்சம் அவனு டைய அருளையும் செயலையும்கூட மீறி வரும்போலும்: இன்று தாளமும், ஸ்ருதியும். லயமும், கானமும் அப்படி ஒரு அமைப்பில் சேர்ந்தன.

திமி திமி தக்கத்தக்க

தக்கத் தக்க திமி திமி

இேதோ ஆடப்போகிறேன்' என்று சாங்கோபாங்க மாகச் சொல்லிக்கொண்டு அவன் ஆட்டம் துவங்குவதில்லை. அதுபோன்ற செயற்கையான முன் அறிவிப்பு ஆனந்தத்தின், எழுச்சியின் விளைவாய் ஆட்டத்துக்கே மாறானது.

அவன் ஆடிக்கொண்டேயிருப்பான். ஆடிக்கொண்டே யிருந்தான். கூட தாளங்கள் திட்டட்டும். தம்பட்டங்கள்