பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宽莎 வா, ச. ராமாமிருதம்

நான்தான் வந்துட்டேனே! சந்தரு இப்போ திரும்பி போறப்போ நீதான் துணை வரணும்.'

விஷயத்தை விளக்கினதும், கிழங்குமாதிரி டார்ச்சை எடுத்துக்கொண்டு சந்தரு உடன் கிளம்பிவிட்டான்.

முள்வேலி பூரா கீழே அடித்து பார்த்தாகிவிட்டது. பூவரச மரத்தின் வேர் முடிச்சுகளுடன் முடிச்சாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறதா? மேலே கிளையில் சுற்றிக் கோண்டிருக்கிறதா?

இல்லை.

சந்தருவின் காலடியில் கீழே ஜமக்காளமாக உதிர்த்து கிடக்கும் பூவரசம் சருகுகள் சரக் சரக்'.

மாமா நான் மலைக்குப் போறேன். தரிசனம் பண்ணி வெக்கறது வரை நான் அவனுடைய பொறுப்பு-எனக்கு எதுவுமே நீங்க நெனக்கறபடி நேராது. சாமியே சரணம் ஐயப்போவ்

நம்பிக்கையின் முதல், சந்தரு பகுத்தறிவு சந்தேகங். களின் பீடம், ஆனால் இரண்டுமே இல்லாமல் முடியாது. இதென்ன கோலம்?

கேட்டுக்குத் தென் மூலையில் கிடந்த செங்கல் குவியலின் மேல் ஏறி நின்றுகொண்டு சந்தரு , டார்ச் வெளிச் சத்தைச் சுற்றிலும் மேலோட்டமாக விட்டான்.

போன இரண்டாம் வருடம் வீட்டைப் பழுது பார்த்த மிச்சம் முழுதும் அரையுமாய், வெய்யிலில் காய்ந்து, மழையில் ஊறி நாளாவட்டத்தில் கலைந்து சரிந்து அவலமாய்...

மாமா, எனக்குத் தெரிஞ்சவரை முள் வேலியில் அது இல்லை. இத்த செங்கல் குவியலுள் அது புகுந்து கொண் டிருந்தால், அதை யாரும் ஒண்ணும் பண்ணிக்க முடியாது. சரி வரேன் மாமா, எனக்கு நேரமாச்சு, நைட் ஷிஃபட்-'"