பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம் 2 I of

நீல முகத்தில் செக்கச் செவேல் அதரங்கள். நெற்றியில் பளிச்சென மூன்று பட்டைகளில் துலங்கும் திருநீற்றின் அடிப்பட்டையின் கீழ் புருவ மத்தியில் குங்குமத் திலகம் , க்ரீடி அவள் அரசிளங்குமரி அன்றோ! மதுரைக்கு அரசி. இன்று என்ன இவளைப் புதிதாகவா பார்க்கிறேன்? ஆனால் ஏன் எனக்கு இந்தப் பரவச நிலை? தொண்டையில் கேவல்? ஆண்டவனே ஸ்தம்பித்துப்போனான். நான் யாரை எனக்கு மேலாக இப்போது அழைக்கிறேன்?

நீலாம்பரி. நீலாயதாஷி, நீலாம்பிகே, நீலோத்பவே, நீலகமலே, கமலாம்பிகே, சர்வமங்கள மாங்கல்யே, அகில லோக நாயகி,

அவனுடைய பரவச நிலையில் அவனின்று நாமாவளி புறப்பட்டது.

அன்னபூர்னே! ஆனந்தமயி! -

ஆனால் இப்போது அவள் கோபமயீ. கோபம் அவளுக்குத் தனி அழகு தருகின்றது. அதே சமயத்தில் கண்களில் ஒரு மான் மருட்சி. இவைதான் நெஞ்சை அள்ளு கின்றன. ஐயோ! அவள் கண்கள் பயத்தில் சுழன்றன. அவனுடைய இடப்பாகத்தினின்று சொட்டியரத்தத்தினைச் சுட்டிக் காட்டினாள்.

இது நீ!’

அவன் அவளை நெருங்குகையில் காலடியில் சீறல் கேட்டுக் குனிந்தான். அவன் காலடியில் காவலாக ஐந்து தலைக் கருநாகம் படம் எடுத்துப் பூமியில் அடித்து நிமிர்ந்தது.

அதை வாரியெடுத்துத் தன்மேல் விட்டுக்கொண்டான். குழந்தாய்! உன் கோபம் மெச்சற்குரியது. ஆனால் நான் விடமுண்ட கண்டன். நீ என் செய்வாய்! நானும் என் செய்வேன்.