பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗易纷 லா. ச. ராமாமிருதம்

ப்ரபோ! என்னை மன்னித்துவிடுங்கள்." அவள் அலறினாள். அவள் கண்ணிர் பெருகிப் பூமியில் விழுந்து

அங்கங்கே வெந்நீர் ஊற்றுகள் புகைந்தன.

தேவி எங்கு செல்கிறாய்?"

என் பிராயச்சித்த தவத்துக்கு நான் இயங்கும் சக்தி, உங்கள் மாறாத புனிதத்தை நான் என்றும் அடைய முடியாது. என் தீக்குளியில் ஞான ஸ்நானத்துக்குத்தான் அவ்வப்போது இப்படி நேருகின்றதோ என்னவோ? அவ்வப் போது அறியாமல் பிரிந்துவிடுகிறேன். ஆனால் உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. ஆனால் என்னைப் புனிதப்படுத்திக் கொள்ளாமல் உங்களுடன் நான் ஒன்ற முடியாது.”

அவன் வாயடைத்து நின்றான்.

சந்தேகம் ஒரு துரோகம். பாபச் செயல்களிலேயே கொடுமையானது. வழக்கம்போல் தவங்கிடந்து வழக்கம் போல உங்களை வரித்து, வழக்கம்போல் தாங்கள் வந்து என்னை ஆட்கொண்டு என் இடம் உங்கள் இடப்பாகத்தை முறைப்படி அடைகிறேன்.""

கண் இமைக்கும் நேரத்தில் அவள் அங்கு இல்லை.

வானத்தை அண்ணாந்து சிவன் இட்ட கூக்குரல். வானம் பட்டை உரிந்து நrத்ரங்கள் பூமியில் உதிர்ந்தன. நெளிந்து ஊர்ந்து ஒளிய இடம் தேடின. வெண்மேகத்தின் நடுவே கறு ரத்தக் கட்டி உடைந்தது. செடிகள், கொடிகள் மரங்கள் கருகின.

வெறி பிடித்தவனாய், வெள்ளிமலை உச்சிக்கு ஒடி னான். மலை உச்சியில் நின்றான். இடப்பாகம் தந்தேன். ஆவள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இப்போது எல்லோரும் என் வலப்பாகம் பாருங்கள்.” -